(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

சங்கேத மொழியை மாற்றி உபயோகப் படுத்தினால் மட்டுமே அது ராம்சிங் என்றுத் தெரியும். மற்றவர்கள் அப்படிச் செய்ய முடியாது”

“மிக நன்று. தற்போது இளவரசரின் திட்டம் என்ன என்றுக் கேட்கலாம்?”

அவர்கள் சற்று நேரம்  காத்து இருக்க, மீண்டும் திரும்பி வந்த ராம்சிங், இந்த முறை தன் வாளால் இருமுறைத் தட்டினான்.

அதற்கு காமினி இரண்டு முறை தன் கால்களை தட்ட, சற்று நேரம் மௌனம். பிறகு காமினி இரண்டு முறை கால்களைத் தட்ட, மீண்டும் வாளின் சத்தம் இரண்டு முறை கேட்டது.

பின் காமினி,

“இளவரசரின் உத்தரவு என்ன?” என்றுக் கேட்டாள்.

“விழாவிற்கு சென்றுத் திரும்பும் போது, பாதுக்காப்புப் பணியாளராக இளவரசர் வருவார். அப்போது சந்திக்கலாம் என்றுக் கூறினார்” என்றான்.

“சரி. ஆனால் செய்தியை அவரிடம் எப்படிச் சேர்ப்பது? வேறு யாருக்கும் அது தெரியவும் கூடாது”

‘தங்கள் செய்தியை சித்திரமாகத் தரக் கேட்டு இருக்கிறார்” என்றான் ராம்சிங்

“அப்படியே செய்கிறோம்” என்று இருவரும் தங்கள் இடத்திற்குத் திரும்பிவிட்டனர்.

இவை எல்லாம் தூரத்தில் இருந்து அக்பரின் உளவாளி ஒருவன் கண்காணித்துக் கொண்டு இருந்தான்.

காமினி, ராம்சிங் இருவரும் பேசி முடித்த சிறிது நேரத்தில், அக்பரின் உளவாளி, அவரின் அறையில் நின்று இருந்தான்.

“சொல்லு’

“ராஜபுத்திர வீரர்களில் ஒருவனும், ஜோதா ராணியின் பணியாளரும் இரண்டு முறை சந்தித்துப் பேசிக் கொண்டனர்.”

என்ன பேசினார்கள் என்பது போல் பார்க்க,

“அது புரியவில்ல அரசே. ஆனால் இருமுறையும் அவர்களுக்குள் ஏதோ சங்கேத ஒலி கொடுத்துக் கொண்டனர்”  என்றான்.

“ஹ்ம்ம். மேலே சொல்லு”

“இரண்டாம் முறை அவன் திரும்பி வந்து ஏதோ சொன்னதும், இருவரும் சென்று விட்டனர்.”

“அவன் யாரைச் சந்தித்து வந்தான்?”

“ராஜபுத்திர காவலர் தலைவன்” என,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.