(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

இதன் அழகைக் கண்டு ரசித்து விட்டு எல்லோரும் கிளம்பினர்.

ப்ரித்வி “பிரெண்ட்ஸ், இதோட உங்களுக்கு ராஜஸ்தான் ட்ரிப் முடிந்து விட்டது. இனி டெல்லி , ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தான். அடுத்து அங்கே தான் நம் பயணம். இந்த ட்ரிப் உங்களுக்கு உபயோகமா இருந்ததான்னு தெரிஞ்சிக்க , உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லலாம். தேவை இல்லாத இடங்கள்ன்னு ஏதாவது இருந்தா அதை நீங்க குறிப்பிட்டுச் சொல்லுங்க. எங்களோட அடுத்த ட்ரிப்லே அதை சரி செய்யறோம். இனி வருபவர்களுக்கு அது பயன்படக் கூடும்” என்றுக் கூறினான்.

எல்லோரும் நன்றாக இருந்தது என்றே சொன்னார்கள். ஒரு மாணவி மட்டும் எழுந்து கேட்டாள்.

“சார், எல்லாமே ஒரே மாதிரியான இடங்கள் தானே. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டிட அமைப்பும் கூட. பிறகு ஏன் நாம அதுக்கு இத்தனை நாள் செலவழிச்சோம்?”

“குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்கா?”

“இல்லை சார். பொதுவா தான் தோணிச்சு”

“ஒரே மாதிரியான இடங்கள் தான். ஆனால் அங்கே அங்கே உபயோகப் படுத்தி இருக்கிற மணல், கல் இவை எல்லாம் வேறானவை. அதே போல் ஒவ்வொரு இடத்திலும் அந்த வாழ்வியல் முறைகளிலும் வித்தியாசம் இருக்கும். வெறுமனே ஊர் சுற்றிப் பார்க்கிறவங்களுக்கு ஜெய்ப்பூரில் அத்தனையும் பார்த்து விடலாம். அது மியுசியம் மாதிரி தான் இருக்கும். விலங்குகள ஜூவில் பார்க்கிறதுக்கும், சபாரி ரைட்டில் காட்டில் பார்க்கிறதுக்கும் உள்ள வித்தியாசங்கள் தான் இங்கேயும் இருக்கும்”

ப்ரிதிவியின் இந்த பதிலில் எல்லோருக்குமே உடன்பாடு என்பதால் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்கவில்லை. ப்ரித்வியே சில தகவல்கள், இவர்கள் வேலை சம்பந்தமாக அரசு அதிகாரிகளை எப்படி அணுகுவது என்பது எல்லாம் சொல்லிக் கொடுத்தான்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு எல்லோரும் ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பினார்கள்.

திலிப் “ராஜஸ்தான் மக்களுக்கு ஒரு ஓ போடு” என்று கூற, மற்ற அனைவரும் ஓ என்று கத்தினர்.

அப்படியே ஒட்டகத்தில் ஆரம்பித்து, யானை வரைக்கும் அனைவருக்கும் ஓ போட்டு முடிக்கவும், பஸ்சில் ஏறினர்.

ஐந்து மணி நேரம் பயணக் கணக்கு. ஆனால் டெல்லி நெருங்க நெருங்க ட்ராபிக் எப்படி மாறும் எனச் சொல்ல முடியாது. அதனால் டெல்லி நெருங்கும் முன்னரே ஒரு உணவகத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.