(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், நடைமுறைக்கு எத்தனை தூரம் சாத்தியம் என்று யோசித்தாள்.

“அவர்கள் ஒருவேளை கடத்தவில்லை என்றால்?”

“நிச்சயம் நடக்கும். ஏன் என்றால் இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு. நீ சென்னை போயிட்டா , அந்த செல்வத்தால் முடியாது. மேலும் தெரிந்த இடத்தில் வம்பில் மாட்டிக் கொள்ளவும் யோசிப்பான். இங்கே லோக்கல் ரவுடிகளை வைத்து வேலையை முடித்து விட்டு , ஒன்றும் தெரியாத மாதிரி இருப்பது தான் அவனைப் போன்றவர்களின் வழக்கம்”

கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு வேறு ஒன்று தோன்றியது.

“பாஸ், அவங்க பிளான் எல்லாம் சொல்றதப் பார்த்தா நீங்க தான் தனியா கேங் வச்சு சுத்தற மாதிரித் தெரியுது. உண்மையில் செக்யூரிட்டி ஏஜன்சி எல்லாம் இருக்கா?” என்றுக் குறும்பாகக் கேட்டாள்.

“ஒய்.. எல்லா காண்டக்ட் டிடைல்ஸ்சம் இந்தக் கவர்லே இருக்கு? வேணும்னா செக் பண்ணிக்கோ” என்றான்.

“ஈமெயில் ஐடி – கிட்னப்சிங்.காம் தானே ? “ என்றுக் கண் சிமிட்டிக் கேட்கவும் இன்னும் சிரித்தான்.

பிறகு “உன் பெரியப்பாவிடம் பேசு. நாளைக்கு எப்படி நடந்துக்கனும்ன்னு அவர் சொல்லுவார். அது படி நடந்துக்கோ” என்றான்.

“ஏன் ? நீங்க சொல்ல மாட்டீங்களோ?” என்றுக் கேட்க,

“நாம ரொம்ப நேரம் தனியா பேச வேண்டாம்னு தான் அவரைச் சொல்லச் சொல்லிருக்கேன்” என்றான்.

“சரி பாஸ். “ என்று தன் அறைக்குத் திரும்பியபடி “குட் நைட்” என்றாள்.

“ஹேய். ஒரு நிமிஷம் “ என்றவன், “கிரண் தேவி தான் அந்தக் காமினி சொன்னத கேட்காம கேஷியோ நட் வேலைப் பார்த்தான்னா, நீயாவது கொஞ்சம் நிதானமா செய்” என்றுக் கூறவும், கிருத்தி திரு திருவென்று விழித்தாள்.

பின் அவள் செல் சத்தம் கொடுக்கவும், எடுத்துப் பார்த்துத் தன் பெரிய தந்தையுடன் பேசி விட்டு வைத்தாள். பேச என்ன அவர் சொன்னதற்கு எல்லாம் சரி , சரி என்று சொல்லி வைத்தாள்.

அதன் பிறகு அவள் படுத்துக் கொண்டு மறுநாள் விடியல் என்ன செய்யப் போகிறதோ என்று பயந்து கொண்டு இருந்தாள். அதில் அசதியோடு தூங்கவும் ஆரம்பித்து இருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.