(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

மதிய உணவை முடித்துக் கொண்டனர்.

எதிர்பார்த்தது போல் நேரம் கடந்து கொண்டு தான் இருந்தது. மாணவர்களும் களைத்து விட்டனர். தொடர் அலைச்சல், உணவு மாற்றம் , இவை எல்லாவற்றோடு வீட்டினரைப் பிரிந்து இருக்கும் துன்பம் எல்லாம் சேர்ந்து அவர்களைச் சோர்வடைய வைத்து இருந்தது. இன்னும் மூன்று நாட்கள் . அதன் பிறகு அவர்கள் தங்கள் உறவுகளிடம் சென்று விடுவார்கள். இதை எல்லாம் எண்ணியபடி பேசிக் கொண்டு வந்தனர்.

டெல்லியில் இவர்களுக்கு மொத்தமாக அறை கிடைப்பது சற்றுச் சவாலாகத் தான் இருந்தது. வந்து இறங்கிய போது ஒரு இரவு மட்டுமே என்பதால் எப்படியோ கிடைத்து விட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் என்பது கொஞ்சம் சிரமாமகவே இருந்தது.

எப்படியோ பழைய டெல்லியில் கிடைத்து விட, எல்லோரும் ரூமிற்கு சென்று அசதியில் படுத்து விட்டனர்.

இரவு உணவிற்கு எல்லோரையும் அழைக்க, பாதிப் பேர் வந்தனர். மீதிப் பேர் மற்றவர்களை எடுத்து வரச் சொல்லி விட்டனர்.

கிருத்தியும் அவள் தோழி ராகவியும் வந்தார்கள். ராகவி உணவு எடுத்துக் கொண்டு அறைக்குப் போய் விட, கிருத்தி அங்கேயே ஒரு மேஜையில் அமர்ந்தாள்.

ப்ரித்வியும் அவள் எதிரில் அமர்ந்தான். எப்போதும் போல் கை, வாய் யுத்தம் நடைப் பெற்றுக் கொண்டிருக்க, கிருத்தி எதிரில் அமர்ந்தவரைக் கவனிக்கவே இல்லை.

ப்ரித்வி “ஹெலோ கிருத்தி” எனக் கூப்பிடவும் , நிமிர்ந்தவள், இடது கையால் ஒரு சல்யுட் வைத்து , தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“ரொம்ப பிஸி யா?”

“பார்த்தாத் தெரியலை?”

“பேசிட்டே சாப்பிடலாமே?”

“ச்ச். எங்க அம்மா சாபம் நிறைவேறிடுமோன்ற பயத்தில் வேகமா சாப்பிட்டு இருக்கேன்”

“அம்மாவா? உனக்கு சாபம் கொடுத்தாங்களா? அப்போ நீ ஏதோ வம்பு பண்ணிருக்கனுமே?”

“போங்க பாஸ். பெத்த அம்மா கிட்டே வம்பு வளர்க்க உரிமை இல்லையா இந்த நாட்டிலே? இருங்க இதுக்கு எங்க மீம்ஸ் கிரியேட்டர் அசோசியேஷனில் ஒரு போஸ்ட் போட்டு விடறேன் “

“அடக் கொடுமையே. இதுக்கும் மீம்ஸா? உனக்கு இல்லாத உரிமையா? தாராளமா பண்ணிக்கோ? ஆனால் என்ன சாபம்ன்னு மட்டும் சொல்லிடேன்”

“அதுவா? இந்த டூர் முடிவானவுடன் அவங்க கிட்டே நான் விதம் விதமா சாப்பிடப் போறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.