(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 39 - தேவி

டந்த சில வருடங்களாக அக்பரைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு வருகிறார் ராணா பிரதாப் சிங். ராஜபுத்திர சிறு அரசுகளிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் , ராணாவை எதிர்ப்பதற்காக சிலரும், ராணாவோடு சேர்ந்து கொண்டு இருக்கும் சிறு அரசுகளை எதிர்ப்பதற்காக சிலரும் அக்பரோடு சேர்ந்து கொண்டனர்.

அதிகார ஆசையிலும் , செல்வத்தின் மீதான நாட்டதிலும் திருமணத் தொடர்புகள் மூலமாக சில ராஜபுத்திர சிற்றரசுகள் ராணாவைக் காட்டிக் கொடுக்க முனைந்தனர். அதில் எல்லாம் ராணா சிக்காமல் இருக்கவே, அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருந்தார் அக்பர்.

ஒரு பக்கம் சமாதானத் தூது எனவும், மற்றொரு பக்கம் உளவாளிகள் மூலமாகவும் ராணாவின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து சிறு சிறு படைகளை அனுப்பி ராணாவை வெற்றி கொள்ள நினைத்தார். ஆனால் ராணா அந்தப் படைகளைத் தோற்கடித்ததோடு தன் பக்கம் இன்னும் படைப் பலத்தை அதிகரித்துக் கொண்டு இருந்தார்.

ராணா, அக்பரோடு நேருக்கு நேராகப் போர் புரியக் காத்து இருக்க, ராணாவின் வீரத்தையும், படைத் திறனையும் நன்கு உணர்ந்து இருந்த அக்பர் தான் நேரடியாகச் சம்பந்தப் படமாலேயே ராணாவோடு போர் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தார்.

ராஜபுத்திரர்கள் மூலம் ஏற்பட்டு இருந்த திருமணத் தொடர்புகளில், ஆம்பூர் ராணி ஜோதா சற்றுப் புத்திசாலி. அவளின் தந்தைக்கும் ரானாவிற்கும் தீராப் பகை இருக்க, தன்னுடைய மற்ற சகோதரர்கள் ரானாவிற்கு ஆதரவு அளிக்கவே, ஜோதாவின் தந்தை அக்பரோடு இருந்தார்.

அவர் மூலம் ராணாவின் இருப்பிடம் அறிந்து கொண்டு இருந்த அக்பர், அவரை வெல்ல முடியாததற்கு காரணம் யோசித்துக் கொண்டு இருந்தார். ஜோதாவிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுத்து ராணாவின் திறமை அறிந்து கொண்ட அக்பர் அதற்கு தகுந்தாற் தன் படைகளைத் தயார் செய்து கொண்டு இருந்தார்.

முகலாயர்களின் புத்தாண்டு பிறப்பதற்கு சற்று நாட்களே இருந்த நிலையில், பதேபூரில் உள்ள பெண்கள் விரும்பும் நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் வாங்க மீனா பஜார் என்ற இடத்தில் கடைகள் போடப் படும். பொதுவான சட்டப்படி முகலாயப் பெண்கள் அந்நிய ஆடவர்களைப் பார்ப்பதில்லை என்பதால், இந்தக் கடைப் போடும் நாளில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து இருந்தார் அக்பர்.

அக்பர் அரண்மனையைச் சேர்ந்த ராஜபுத்திரப் பெண்களுக்கும் இந்தக் கடைகளைச் சுற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.