(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பின்,

“வீரரே, ஆண்கள் என்று யாருமே உள்ளே இல்லையா?” என்றுக் கேட்டான்.

“இல்லை.”

“எங்களை அனுமதிப்பதில் என்னப் பிரச்சினை உங்களுக்கு?”

“நீங்கள் மட்டுமல்ல, எங்கள் வீரர்களுக்கும் அனுமதிக் கிடையாது?”

“நீங்கள் மட்டும் உள்ளே போகலாமா?”

“இல்லை. எங்களுக்கும் அனுமதி இல்லை”

“எனில், உள்ளே வியாபராம் செய்பவர்கள் ஆண்கள் தானே “

“அவர்களும் பெண்கள் தான்” என்றுக் கூறவும், மயக்கம் வராதக் குறை தான்

“என்ன?”

“ஆமாம். அங்கே கடை போட்டு இருப்பவர்கள் தங்கள் வீட்டு ஆண்களோடு அதி காலையில் வந்து விட வேண்டும். கடைகளில் பொருட்கள் எல்லாம் அடுக்கி முடித்தப் பின்பு, தேவையான விபரம் சொல்வார்கள். சில மணி நேரங்கள் கழித்து ஒரு மணி ஒலிக்கும். பிறகு ஆண்கள் வெளியேறி விட வேண்டும். அதற்குப் பிறகு அந்தி சாயும் நேரத்தில் மீண்டும் ஒரு மணி ஒலிக்கும். பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் உடனடியாக வெளியேறி விட வேண்டும். பின் மீண்டும் ஆண்கள் உள்ளே சென்று தங்கள் கடைகளைக் காலி செய்து கொள்ள வேண்டும்”

“ஒஹ். “ என்றவன், “உள்ளே சென்ற பெண்கள் எல்லாம் வெளியே வர இந்த ஒரு வாசல் தான் இருக்கிறதா? “ என்றுக் கேட்டான்.

“ஆம். இந்த ஒரு வாசல் தான்” என்றுக் கூறியப் பின், வேறு ஏதும் செய்ய வழி இல்லாது அங்கேயே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான் ப்ரித்விராஜ்.

உள்ளே சென்ற கிரண் தேவியும், காமினியும் வியந்து போயினர். உள்ளே இல்லாத பொருளே இல்லை எனலாம்.

வீட்டு அலங்காரப் பொருட்களில் இருந்து, ஆடை , ஆபரணங்கள் வரை விற்கப்பட்டது. ஒரு புறம் முழுதும் விசேஷத்திற்கு சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள் சிறிது முதல் பெரிது அத்தனை அளவுகளிலும் இருந்தது.

தின்பண்டங்கள் கடை ஒரு புறம் என்றால், ராஜபுத்திரர்களின் வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்பொருட்களும் கடைப் போடப் பட்டு இருந்தது..

காணக் காணத் தெவிட்டவில்லை. ராணிக்கேத் தான் வந்த வேலை மறந்து விடும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.