(Reading time: 10 - 20 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இட்..”

ம்ம் அப்பா இறந்து ஒரு பத்து நாள் சரியா நியாபகம் இல்லை..ஆனா 10-15 நாள் அம்மா நல்லாதான் இருந்தாங்கனு நினைக்குறேன்.ஒரு நாள் பூஜை அறையில் உக்காந்துரந்தப்போ அப்படி கதறி அழுதாங்க..

எல்லாரும் போய் பார்த்து என்ன செய்யனு தயங்கினாங்களாம்.தாத்தாவும் பாட்டியும் தான் அவங்க அறைக்கு அழைச்சுட்டுப் போய் சாய்ந்திரம் வர கூட அவங்க வெளியவே வராம அப்பறம்  மாடியில் இருக்குற அறைக்குப் போய் கதவை சாத்திட்டாங்க.

அதிலிருந்து ஒரு நாலு இல்ல அஞ்சு முறை நான் அவங்களை தனியாப் போய் பார்த்துருப்பேன்..மத்தபடி எல்லாமே தாத்தாவும் பாட்டியும் தான்.அதுக்கப்பறம் என்னையும் காலேஜ் படிப்புக்காக வெளியே அனுப்பிட்டாங்க..அஞ்சு வருஷம் நான் இங்க இல்ல..அதாவது லீவ்க்கு வந்துட்டு போறதோட சரி.

அப்படி என்னோட யூஜி கடைசி வருஷ லீவுக்கு வந்தப்போ தான் அந்த கேர்டேக்கர் பத்தின விஷயம் எனக்குத் தெரியும்.நான் கூட யாருனே தெரியாத ஒருத்தங்களை நம்பி அம்மாவை எப்படி விட முடியும்னு தாத்தா கிட்ட கேட்டேன்.

நாங்க எல்லாம் இங்க தான டா இருக்கோம்.அது மட்டுமில்லாம அவ உன் அம்மாவோட சிநேகிதினு சொல்லிட்டார்.அதுக்கு மேல என்னாலேயும் எதுவும் பேச முடீல..”

ம்ம்ம்”,என்றவள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாய் உணர்ந்தவன்,

என்னாச்சு ஷியாமா?”

நத்திங் மகிழன்..எதோ ஒண்ணு குழப்பமா சந்தேகப்படணும்ங்கிற மாதிரியே தோணுது மனசுல..பார்க்கலாம்..ஆமா உங்கம்மா பேரை தான் உங்க அத்தை பொண்ணுக்கு வச்சுருக்காங்களா?”

கொஞ்சம் அப்படிதான்.என் பாட்டிக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் அவங்க தான் எங்க அம்மாவை தியானு கூப்பிட ஆரம்பிச்சு அப்பறம் அதுவே அவங்க பேரா மாறிடுச்சு..அதனால அதையே தியாக்கும் வச்சுட்டாங்கஎன் அத்தை மாமாக்கு விருப்பம் இல்லை தான் ஆனாலும் ஒண்ணும் சொல்லல..”

ஓ அப்போ அம்மாவோட முழுப் பெயர்?”

சந்தியா தேவி.”

நைஸ்..அண்ட் அவங்க சொந்த ஊர் எதுனு தெரியுமா உங்களுக்கு?”

ம்ம் தமிழ்நாட்டுல ஊட்டி பக்கத்தில் ஏதோ கிராமம்னு நினைக்குறேன்..ஆனா இப்போ யாருமே அங்க இல்ல எனக்குத் தெரிஞ்சு..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.