(Reading time: 11 - 21 minutes)
Kaarigai
Kaarigai

என்று தயக்கமாக இருந்தது அவருக்கு. சிறிது யோசித்தவர், "சரிங்க மேடம். நான் உங்களுக்காக எடுத்துக்கறேன். ஆனா ட்ரைனியா தான். அவங்க ஆறு மாசம் எப்படி ஒர்க் பண்ராங்கனு பார்த்துட்டு தான் ஒர்க் கன்போர்ம் பண்ண முடியும். பட் அது என் கைல மட்டும் இல்லை. அதுவும் இல்லாம ஒர்க் கன்போர்ம் ஆனா டூ யேர்ஸ் அக்ரீமெண்ட்ல சைன் பண்ணனும். அதுக்குள்ள இடையில போனா லீகல் இஷியூ ஆயிடும்" மிருணாளினி சொல்லவும் சகுந்தலா தேவி அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என கூற, அடுத்த இரண்டு நாட்களில் வந்தாள் பவித்ரா.

அவளை கண்ட போதே மற்ற இளம்பெண்களிடம் இருந்து அவள் வேறுபட்டு தெரிந்தாள். போக போக மிருணாளினியின் எண்ணங்களை எல்லாம் மாற்றுவதை போல இருந்தது அவளின் வேலை மீதான ஈடுபாடும் அவளின் திறமையும்.எதையும் சுலபமாக கற்று கொண்டாள். உணவு இடைவேளையை கூட தன் டேபிளிலேயே கழிப்பவள் காலையில் உள்ளே வந்தால் மாலை வரை அவள் கவனம் வேறு எதிலும் சிதறாது, யாரிடமும் அரட்டை அடித்தது இல்லை. ஏன் மிருணாளியிடம் கூட அலுவலக வேலையை தவிர வேறு எதுவும் பேசியது இல்லை. அவளின் தனிப்பட்ட விவரங்கள் கூட அவளின் ப்ரோபைலை பார்த்து தான் தெரிந்து கொண்டார்.   

அவள் வந்து இந்த நான்கு மாதங்களில் அவளின் மேல் ஒரு நல்ல எண்ணம் வளர்ந்திருந்தது அவரிடம். அதையே எம்பலோயீஸ் பற்றிய அவர்களின் டாட்டாபேசில் ஏற்றியவர் அவளின் வேலை நிரந்தரம் செய்வதற்கான ஒரு ரெக்கமண்டேஷனையும் புதிய மேலாளருக்கு அனுப்பிவைத்து விட்டு கிளம்பினார்.

சென்னையின் அந்த பரபரப்பான ஓஎம்ஆர் ரோட்டில் தன்னுடைய ஸ்கூட்டியை லாவகமாக செலுத்தினாள் பவித்ரா. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிட பயணத்தில் அவளின் விடுதியை  அடைந்தவள் உள்ளே சென்று முகம் கழுவி உடை மாற்றி கொண்டு விடுதியில் இருந்து வெளியே வந்தாள்.

ஐந்து நிமிட நடையில் அந்த ஆஸ்ரமத்தை அடைந்தாள். காருண்யா இல்லம். இது எல்லாவயது பெண்களுக்குமான பாதுகாப்பு இல்லம். சகுந்தலாதேவி அவரின் சேமிப்பு, வருமானம் என எல்லாவற்றையும் இதிலே போட்டு இதை உருவாக்கியிருந்தார். அவர் இருக்கும் வரை அவரின் மூலம் பல நன்கொடையாளர்கள் உதவியில் இந்த இல்லம் சிறப்பாக செயல்பட்டது. இப்போது இங்கு குழந்தைகள், இளவயது பெண்கள், வயதானவர்கள் என கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் இருக்கிறார்கள். பெண்களும் முதியவர்களும் அவர்களால் இயன்ற கைவினை பொருட்களை செய்து விற்பனை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.