(Reading time: 11 - 21 minutes)
Kaarigai
Kaarigai

செய்வார்கள். சில நாட்களுக்கு முன் திடீரென யாரும் எதிர்பாராத சமயத்தில் ஏற்பட்ட சகுந்தலாதேவியின் மறைவால் இப்போது அந்த ஆஸ்ரமத்தின் பொருளாதார நிலை சற்றே கீழே இருக்கிறது. சகுந்தலாதேவி சேர்த்து வைத்த நன்கொடைகள் மூலம் இன்னும் ஒரு மூன்று மாதங்கள் வரை தாக்கு பிடிக்கலாம். அதற்குள் வேறு ஏதேனும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.பவித்ரா தன்னால் இயன்ற அளவுக்கு செய்கிறாள். அவளின் அலுவலக நேரம் முடிந்தால் நேராக இங்கே வருபவள் இரவு ஒன்பது மணி வரை இங்கு உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள், பெண்களுக்கு உளவியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த விளக்கங்கள் கொடுப்பாள். அவளுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் எல்லாம் இந்த ஆஸ்ரமத்தில் தான் கழியும்.

"பவித்ரா அக்கா ஏன் இன்னைக்கு லேட்?" அவள் உள்ளே நுழையும் போதே அவளுக்காக காத்திருந்த குழந்தைகள் கேட்கவும், "ரொம்ப டிராபிக் மா. அதான்" என்றவள் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அவர்களின் அருகே அமர்ந்தாள்.

அதற்க்கு பின் அவளுக்கு நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. இரவு ஹாஸ்டலுக்கு வந்தவள் அவளின் இரவு உணவை முடித்து கொண்டு தன்னுடைய அறைக்கு வந்து அவளின் தேர்வுக்கான புத்தகத்தை எடுத்து வைத்தாள். சிஏ வுக்கான கடைசி பரீட்சை. இதையும் எழுதிவிட்டால் இப்போது இருக்கும் கம்பனியிலேயே நல்ல பதவியில் அமர முடியும். நல்ல சம்பளமும் கிடைக்கும். அதோடு முருகன் தாத்தா சொன்ன அந்த சில நன்கொடையாளர்களையும் பார்த்தால் பின் ஆஸ்ரமத்தை நடத்துவது கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று எண்ணியவள் தன் கவனத்தை புத்தகத்தில் திருப்பினாள்.

காலையில் இருந்தே ஒரு வித பதற்றத்துடன் இருந்த சத்யாவையே பார்த்து கொண்டிருந்தார் லட்சுமி.

"சத்யா" - லட்சுமி

....

"சத்யாயா "  - லட்சுமி

"ஹான் என்னம்மா?" -சத்யா

"என்னடா?" -லட்சுமி

"புரியல.. என்னம்மா என்ன கேக்கறீங்க?" -ஷூ லேஸை காட்டிக்கொண்டே கேட்டான் சத்யா.

"காலைல இருந்து நானும் பார்க்கறேன். நீ ஏதோ டென்ஷானாவே இருக்க. என்னடா ஆச்சு? " -லட்சுமி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.