(Reading time: 11 - 21 minutes)
Kaarigai
Kaarigai

"இல்லையேம்மா" -சத்யா

"எனக்கு தெரியாதா உன்னை பத்தி. புது ஆபீஸ்ல ஏதாவது ப்ரோப்ளேமா?" -லட்சுமி

"சே சே இல்லைம்மா, இன்னைக்கு ஒரு முக்கியமான ஆளை மீட் பண்ணனும் அதான். வேற ஒன்னும் இல்லை. சரிம்மா எனக்கு லேட்டாச்சு நான் கிளம்பறேன். பை. வீட்டை உள்ள லாக் பண்ணிக்கோங்கமா. ஏதாவது வேணும்னா கால் பண்ணுங்க, வரேன்மா" என்றவன் கார் கதவை திறக்க செல்ல, "சாவி இல்லாம எப்படி பா காரை திறப்ப" என்றபடி கையில் சாவியுடன் அவனருகே வந்து நின்றார் லட்சுமி.

"ஹிஹி சாரி மா" அவரின் கையில் இருந்த சாவியை வாங்கியவன் காரில் ஏறி அமர, "சத்யா, எதையுமே பொறுமையா ஹாண்டில் பண்ணு. எல்லா விஷயத்துக்கும் இன்னொரு பக்கம்னு ஒண்ணு இருக்கும். அதையும் பாரு, அப்போ எல்லாமே தெளிவா புரியும்" லட்சுமி சொல்ல சிறு தலை அசைப்புடன் வண்டியை கிளப்பினான் சத்யா.

அன்று காலை எப்போதும் போவதை விட அரைமணி நேரம் முன்பே கிளம்பி விட்டாள் பவித்ரா. புதிய மேலாளர் வந்திருப்பார். அவர் வருவதற்கு முன்பே போனால் ஏதேனும் வேலை இருந்தால் அதை முடித்து வைக்கலாம் என எண்ணியிருந்தாள். அரை மணிநேரம் முன்னதாக கிளம்பியும் அவளின் போறாத காலம் அன்று ஓஎம்ஆர் முழுதும் பயங்க போக்குவரத்து நெரிசல். ஒருவழியாக சமாளித்து அவள் வரும் போது அவள் எப்போதும் அலுவலகத்திற்கு வரும் நேரம் எட்டியிருந்தது.

தன் கேபினுக்கு வந்தவள் அவளுடைய லேப்டாப்பை பேகில் இருந்து எடுத்து ஆன் செய்து வைத்தாள். ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா என பார்த்து கொண்டிருந்தவளின் எக்ஸ்டென்ஷன் டெலிபோன் ஒலியெழுப்ப அதை எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"ஹலோ " -பவித்ரா

....

"எஸ் சார் கமிங் " என்றவள் அவளின் லேப்டாப்பை எடுத்து கொண்டு மேலாளரின் அறைக்கு செல்ல அறையின் கதவில் புதிய பெயர் பலகை சத்யஜித் என்ற பெயருடன் பளபளத்தது.

அந்த அறையில் இருந்த ஒரு வைட்போர்டில் எதையோ எழுதி கொண்டிருந்தான். சீப் அக்கவுண்டண்ட் மற்றும் அவரின் உதவியாளரும் நின்று கொண்டிருந்தனர். மெல்ல கதவை தட்டினாள் பவித்ரா.

"எக்ஸ்கியூஸ் மீ சார், மே ஐ கம் இன் " -பவித்ரா

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.