(Reading time: 9 - 18 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 05 - அமுதினி

தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்

தள்ளியடைக்கப் படுங்குதி ரைக்கும்

கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்

காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;

"வாம்மா பாவி, வா உமா. ரெண்டு பெரும் தயங்காம வாங்க. இது உங்க வீடு மாதிரி. எந்த தயக்கமும் இல்லாம இருக்கலாம்" தயக்கத்துடன் உள்ளே வரலாமா இல்லையா என்ற யோசனையுடன் ஆதி எடுத்து வைத்து கொண்டிருந்த பவித்ராவையும், அவளை பின்பற்றி அவள் பின்னே வந்த உமாவையும் பார்த்த லட்சுமி கூறவும், அமைதியாக உள்ளே வந்தனர் இருவரும்.

"மாணிக்கம் அண்ணே, தம்பிக்கு கொஞ்சம் லக்கேஜ் எடுக்க ஹெல்ப் பண்ணுங்க அண்ணே " லட்சுமி உள்ளே நோக்கி குரல் கொடுக்க, "அம்மா வேண்டாம். நாங்களே எடுத்துக்கறோம்" என்றவாறு காரை நோக்கி திரும்பிய பவித்ரா, "பவிம்மா நீ இப்போ ஹெல்த்தியா இருந்தா நானே ஒன்னும் சொல்லிருக்க மாட்டேன். இப்போ நீ நடக்கவே இவ்ளோ கஷ்டப்படும் போது ஆளுங்க இருக்காங்க எடுத்துப்பாங்க. நீ வா" என அவள் கைபிடித்து உள்ளே அழைத்து சென்றார் லட்சுமி.

அவள் உள்ளே செல்லும் வரையுமே காரில் அமர்ந்திருந்த சத்யா, அவள் உள்ளே சென்றதும் மாணிக்கத்துடன் சேர்ந்து லக்கேஜை எல்லாம் எடுத்து கொண்டான்.

அது நல்ல பெரிய வசதியான பங்களா. அந்த வரவேற்பறையில் இருந்த சோபாவில் இருவரையும் அமரவைத்தார் லட்சுமி. உமாவுக்கு இவ்வளவு பெரிய வீட்டை பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த வீட்டை ஏதோ அதிசயம் போல பார்த்தாள். பவித்ராவுக்கோ இன்னும் இரண்டு வாரம் எப்படி இங்கே கழிப்பது என்ற கவலையே மனதை ஆக்ரமித்து இருந்தது. உள்ளே இருந்து இரண்டு கோப்பைகளில் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் இருவருக்கும் கொடுக்க, உமா எந்த தயக்கமும் இல்லாமல் வாங்கி குடிக்க, பவித்ராவோ யோசனையுடன் வாங்கி கொண்டாள்.

கையில் பெட்டிகளுடன் உள்ளே நுழைந்த சத்யாவையும் மாணிக்கத்தையும் பார்த்த லட்சுமி, "சத்யா கீழ இருக்க ரூம்ல வெச்சுட்டு. அப்பறம் மெதுவா அவங்க திங்ஸ் எல்லாம் அன்பேக் பண்ணிக்கட்டும்" இவர்கள் இருவரும் ஏதோ காலம் முழுதும் இங்கேயே இருக்க போவதை போல பேசி கொண்டிருந்தார் லட்சுமி.

அந்த பெட்டிகளை அந்த அறையில் வைத்து விட்டு சத்யா மேலே அவன் அறைக்கு செல்ல லட்சுமி அவர்கள் இருவரையும் அந்த அறையை காட்ட அழைத்து சென்றார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.