செல்வம் கிருத்தியைக் கடத்திக் கொண்டு வந்து சில மணி நேரங்கள் சென்று இருக்க, ப்ரித்வியும், காவலர்களும் செல்வத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார்கள்.
கிருத்தியின் செல்போனில் ஒரு புது சிப் ஒன்று பொருத்தி இருந்தான் ப்ரித்வி. இந்தச் சிப் செல்போன் ஆப் ஆன போதும், ஆக்டிவ் ஆக இருக்கும். சிப் பொருத்தியப் பின் சற்று நேரம் போன் ஆக்டிவ் ஆக இருந்தால் போதும். அதற்குப் பிறகு ஆப் செய்தால் கூட சிப் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். இந்த சிப் தகவல்கள் அனைத்தும் காவல்துறை கணினியில் மட்டுமே டௌன்லோட் ஆகும்.
கிருத்தியைக் கடத்திய செல்வத்தின் நண்பர்கள் மூவரும் உடனடியாக கிருத்தியின் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தனர். தங்களின் போனை ட்ராக் செய்ய முடியாதபடி தங்கள் சிம் தூக்கி எறிந்தவர்கள், கிருத்தியின் போன் மட்டும் அவள் கைப்பையில் வைத்து இருந்தனர்.
அதனால் கிருத்தி பொருத்தி இருந்த சிப் மூலம் அவர்கள் செல்லும் இடத்தைக் கணித்து, அந்தத் திசையில் ப்ரித்வி , காவல் துறையினரோடு சென்றுக் கொண்டு இருந்தான்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கலாக, கிருத்தியைக் கடத்திக் கொண்டு வந்த செல்வத்தின் நண்பர்கள் , பாதி வழியில் அவளை வேறு ஒரு கும்பலிடம் ஒப்படைத்து இருந்தார்கள். அந்தக் கும்பல் கிருத்தியைத் தங்கள் காருக்கு மாற்றும் போது அவளின் கைப்பையை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.
இதனால் கிருத்தியை ட்ராக் செய்யக் கஷ்டப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு எந்தப் பக்கம் செல்வது எனப் புரியாமல் திகைத்தனர்.
ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னாலும, எதுவும் செயல்படுத்தும் முன் நேரம் கடந்து விடும் என்பதே ஒவ்வொருவரின் எண்ணமும். அப்போது ப்ரித்வியின் போனில் பிரதாப் பேசினார்.
“சார், சொல்லுங்க”
“ப்ரித்வி, நீங்க செல்வம் இருக்கிற இடத்திற்கு ரீச் ஆயிட்டீங்களா?”
“இல்லை சார், அதில் ஒரு ப்ரோப்லேம்” என்று இழுக்க,
“என்ன ஆச்சு?” என்று நிதானமாகக் கேட்டார் பிரதாப்.
“சார், கிருத்தி செல் போன் குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு மூவ் ஆகலை.”
“எந்த இடத்தில் ? அவுட் ஆப் சிட்டி யா? “
“இல்லை, சிட்டிகுள்ளே தான்”
“ஒஹ்” என்று சற்று யோசித்தவர்,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Sema fast a iruku story.
Prithvi, krithikavai kandupidukum vitham arumai.
Krithi escape aaval nu parthen.
But selvam avalai screw driver al kuthitaana?
What next?
Waiting with thrill
prince kula nama.ilavarasru pugundhu or krithi kula kiran vandhu oru action scene varumnu ethir parthen
prathap uncle sema smart 👍 nice epi devi ma'am