(Reading time: 11 - 21 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அவமானத்தை என் வாழ்நாள் உள்ளளவும் மறக்க முடியாது. அதற்கான தண்டனை உனக்குக் கொடுக்கவில்லை என்றால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால் தான் உன்னைக் கடத்தினேன். கடத்தி உன்னை நாசமாக்க வேண்டும் , உன் பெற்றோரும், உன் பெரியப்பாவும் நீ எங்கே என்றுத் தெரியாமல் தேடித் தேடிச் சாக வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதற்கு எத்தனை இடைஞ்சல்? முதல் இடைஞ்சல் இந்த ப்ரித்விராஜன். பெரிய இளவரசன்ன்னு நினைப்பு. உன்னைப் பாதுகாக்கிராறம். அடுத்து எங்க அப்பா . என்னை நான் நினைச்சபடி நடக்க விடாம, அவர் அரசியல் வாழ்க்கைக்காக என்னைக் கட்டிப் போட்டுட்டார். எல்லாத்தையும் விட நீ பண்ண இடைஞ்சல் இருக்கே? பொண்ணா லட்சணமா பாட்டு, டான்ஸ் கட்டுகிட்டோமாநு இல்லாம கராத்தே, குங்க்புன்னு கத்துகிட்டு, பக்கத்தில் எவனையும் நெருங்க விடாம அடிச்சு துரத்தி விட்டு உயிரை வாங்கற. எப்படி எல்லாமோ ப்ளான் பண்ணி, ஒருவழியா உன்னைக் கடத்தினா, என்கூட சுத்தின தடியனுங்க ரெண்டுப் பேரும் சொதப்பி வச்சுட்டாங்க. இப்போ நான் தப்பிச்சாகனும். அதுக்கு உன்னை விட்டா எனக்கு வேறே வழிக் கிடையாது. “ என்றவன், கிருத்தியின் கை முட்டியைப் பிடித்து இழுத்தப் படி நகர்ந்தான்.

ப்ரித்வியிடம் திரும்பி

“ப்ரித்வி உன் ஆட்கள் எல்லோரையும் பிஸ்டல் கீழேப் போடச் சொல்லு” என்றான்.

ப்ரித்வி அவர்களைப் பார்த்துத் தலையசைக்கவும் , பிஸ்டல் கீழே போட்டனர். ப்ரித்வியும் தன் பிஸ்டலைக் கீழேப் போட்டான்.

கிருத்தியைக் கூட்டிக் கொண்டே வாசல் வரை வந்தவன், அங்கிருந்த போலீசைப் பார்த்து

“ஹ்ம்ம். கார் திற” என்றான். அவன் திறக்கவும், கிருத்தியை டிரைவர் சீட் வழியாகவே உள்ளேத் தள்ளியவன், கார் ஸ்டார்ட் செய்தான்.

அவன் காரில் ஏறிய அடுத்த நிமிடம் வேகமாக வந்தப் போதும் ப்ரித்வி வருவதற்குள் கார் வெளிவாயிலைத் தாண்டி விட்டது.

ப்ரித்வியின் அருகில் போலீஸ் ஜீப் வந்து நிற்க, இரண்டு மூன்று ஜீப்களில் செல்வத்தின் காரைப் பின் தொடர்ந்ததனர்.

அதற்குள் வயர்லஸ் மூலம் டோல் எல்லாம் அலெர்ட் செய்யப் பட,  செல்வமோ எதையும் சட்டைச் செய்யாமல் தன் போக்கில் போய்க் கொண்டு இருந்தான். அவன் கண்கள் இரண்டும் எங்கோ சொருகி இருக்க, முன்னும் பின்னும் பார்க்காமல் மிக வேகமாக ஒட்டிக் கொண்டு இருந்தான்.

அதைப் பார்த்தக் கிருத்திக்குப் பயம் வர, என்ன செய்யவென்று வெளியேப் பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.