“செல்வத்தோட பிரெண்ட்ஸ் என்ன ஆனாங்க?”
“அவங்க தான் கிருத்தியக் கடத்தினதே சார்?”
“ஹ்ம்ம்” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ப்ரித்வி அருகில் வந்த ஒரு போலீஸ் சில விஷயங்கள் சொல்ல, “வாட்?” என்றுக் கேட்டான்.
அவனின் குரல் கேட்ட பிரதாப்,
“என்ன ப்ரிதிவி?” என்றார்.
அதற்கு பிறகே அவர் லைனில் இருந்ததை உணர்ந்தவன்,
“சார், செல்வத்தோட பிரெண்ட்ஸ் மூணு பேரும் டெல்லி ஏர்போர்ட்லே அர்ரெஸ்ட் ஆகிருக்காங்க” என்றான்.
“எப்படி? என்ன செய்தாங்க?”
“டிரக் கடத்தினதற்காக”
“அவங்களை விசாரிச்ச்சா?
“எஸ். அவங்க கைதானது கடத்தல் கேஸ்க்காக தான். அவங்க இத எதிர்பார்க்கதாதல் செல்வம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டாங்க”
“ஒஹ். குட். அப்போ அவங்க கிருத்திய எங்க விட்டாங்கன்னு சொல்லிருப்பாங்களே?
“இல்லை சார். அவங்களுக்கு அது தெரியல. இவங்க கிட்டேர்ந்து வேறே ஒரு கும்பல் கிட்டே கிருத்தி மாறியிருக்கா”
“ஒஹ்” அவர் குரலில் தற்போது கவலை தெரிந்தது.
“ஒரு ஆறுதல் என்னன்னா, அவங்க கிட்டேர்ந்து கிருத்தி கை மாறி ஒரு மணி நேரம் தான் ஆகுது. அதனால் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. பட் எந்த பக்கம் தேடறது என்பது தான் தெரியவில்லை”
அப்போது பிரதாப் “ப்ரித்வி, செல்வம் பிரெண்ட்ஸ் கைது ஆகி எவ்ளோ நேரம் ஆகுது?” என்றுக் கேட்டார்.
“ஒரு அரை மணி நேரம் இருக்கும் சார்”
“ம்ம்” என்று யோசித்தவர், “ப்ரித்வி, ஒரு ஐஞ்சு நிமிஷத்தில் கூப்பிடறேன்” என்று வைத்தார்.
சொன்ன மாதிரி ஐந்தாம் நிமிடம் முடிவில் பிரதாப் அழைக்க,
“ப்ரித்வி, செல்வத்தோட அப்பா இருபது நிமிஷம் முன்னாடி பேசியிருக்கார். அவர் போன் செய்த நம்பர் புதுசு. ஆனால் பேசின இடம் டெல்லி பக்கம் தான் காமிக்குது. சோ அந்த இடத்தோட மேப் அனுப்பறேன். நீ செக் பண்ணிக்கோ. ஐ ஹோப் செல்வம் அந்த இடத்தில்