(Reading time: 11 - 21 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தான் இருக்கணும்” என்றார்.

“எஸ். நீங்க அனுப்புங்க சார். நான் பார்த்திட்டு சொல்றேன்”

அவர் அனுப்பிய மேப்பில் போட்டுப் பார்க்க, இவர்கள் வந்த திசைக்கே மீண்டும் சென்று இருப்பது புரிந்தது. அப்படியானால் இத்தனைத் தூரம் கடத்தி வந்தவர்கள், மீண்டும் வந்த வழியே சென்று இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டான்.

ப்ரதாப்பிடம் அதை உறுதிப்படுத்தியப் பின், ப்ரித்வி போலீஸ் அதிகாரிகளோடு கலந்துப் பேசினான்.

செல்வத்தின் அப்பா பேசிய நம்பர் இருக்கும் இடத்தின் டவர் மட்டுமே அறிய முடிந்து இருந்தது. தெளிவான இடம் கண்டுபிடிக்க, அந்த இடத்தின் லோக்கல் போலீஸ் உதவியை நாடினார்கள். அவர்களும் சந்தேகப்படும்படியான இடங்களையும், மற்றவர்களின் கவனம் கவராத வீடுகளையும் பிரித்து கொடுத்தனர்.

குற்றச் செயல்கள் நடைபெறும் இடம் தவிர்த்து, மற்ற இடங்களை போலீஸ் அதிகாரிகள் பிரித்துக் கொண்டு குழுவாகச் சென்று தேட ஆரம்பித்து இருந்தனர்.

ப்ரித்வி அங்கே உள்ள லோக்கல் காவலர்களோடு சேர்ந்துக் கொண்டான். அவர்கள் குறி வைத்துச் சென்றது ஒரு நவீன பங்களா. வெளிப்புறம் பெரிய தோட்டம் இருக்க, உள்ளே சற்றுத் தூரத்தில் பங்களா இருந்தது.

போர்டிகோவில் உயர்ரகக் கார் ஒன்று நின்று இருக்க, வெளியில் இருந்துப் பார்ப்பவர்களுக்கு அங்கே உள்ளவர்கள் மிகப்பெரிய ஆட்கள் என்றத் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

காவலர்கள் கூட இங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்றுத் திரும்ப எண்ண, ப்ரித்வி மட்டும் சென்றுப் பார்த்து விட முயன்றான். அவனுக்குத் துணையாக அவர்களும் உள்ளே சென்றனர்.

பங்களாவின் வாசல் வெளிப்பக்கமாக பூட்டி இருக்க, எல்லோரும் திரும்ப ஆரம்பித்தனர்.

அப்போது தான் மெல்லியதாக பேச்சுக் குரல் கேட்டது. திடுக்கிட்டவர்கள் சுற்று முற்றும் பார்த்து விட்டு, தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் செல்லும் வழியாக இருந்த பிரெஞ்சு விண்டோ பால்கனிக்குச் சென்றனர்.

பால்கனி உள்பக்கம் பூட்டி இருக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அந்த மரச்சட்டத்தை கைகளால் வருட, ஓரிடத்தில் வித்தியாசம் தென்பட்டது. அந்த இடத்தை அக்சா ப்ளேடு போன்ற ஒன்றைக் கொண்டு, கீற சத்தமே இல்லாமல் அங்கே பிளவு ஏற்பட்டது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்க, ஒரு கை உள்ளே செல்லும் அளவு வந்ததும் , கைகளை விட்டு அதன் தாள் நீக்கினர்.

பின் அவர்கள் உள்ளே செல்லும் முன், ப்ரித்வி அவர்களின் மற்ற குழுக்களை இந்த வீட்டைச்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.