(Reading time: 11 - 21 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

சுற்றி முற்றுகையிடச் செய்தி அனுப்பினான்.

இவர்கள் வீட்டினுள் நுழைந்து பார்த்தபோது, யாரும் இருப்பதற்கு அறிகுறி எதுவும் தெரியவில்லை. கீழ்த் தளம் முழுதும் பார்த்தப் பின் மாடிப்படியில் சத்தம் செய்யாமல் ஏறினர். அங்கும் யாரையும் காணவில்லை.

தான் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று ப்ரிதிவி செய்வதறியாது குழம்பி நிற்க, மீண்டும் பேச்சுக் குரல் கேட்டது. வீட்டினுள் இருப்பதால் வார்த்தைகள் புரியாவிட்டாலும் சத்தம் நன்றாகக் கேட்டது.

சத்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தவர்கள், சமயலறை பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் நின்று இருந்தனர். அங்கே ஒரு அலமாரியில் சாமான் எதுவும் இல்லாது இருக்க, அதன் அருகில் சென்றுப் பார்த்தபோது சட்டென்று அவனின் கால் எதிலோ மிதிபட்டது.

அப்போது அந்த அலமாரி நகர்ந்து வழி விட , காவலர்களைப் பின்னால் தொடருமாறு சைகை காட்டினான்.

உள்ளே பெரிய அறை இருக்க, அதன் ஓரத்தில் கிருத்திக் கைககள் கட்டபப்ட்ட நிலையில் இருந்தாள். ப்ரித்வியின் வரவை எதிர்பார்க்காத செல்வம் ஒரு நொடித் திகைத்தாலும், சட்டென்று தன் பிஸ்டல் எடுத்து கிருத்தி அருகே சுட்டான்.

அதைக் கண்டு ப்ரித்வியும் மற்றவர்களும் மேலே முன்னேறாமல் நின்று விட, அவர்களைப் பார்த்துக் கொண்டே செல்வம் கிருத்தியின் அருகில் வந்து அவளைப் பிடித்துத் தூக்கினான்.

அவள் நெற்றியில் பிஸ்டல் வைத்து இருக்க, ப்ரித்வியைப் பார்த்து

“நீதான் அந்தப் பாடிகார்டா? ஒவ்வொரு முறையும் அவளைக் காப்பாத்த முன்ன வந்து நிப்பியாமே?” என்றான்.

பிரித்வி பதில் சொல்லாமல் நிற்கவும், அதைப் பற்றிக் கவலைபடாதவனாக

“இந்த சம்யுக்தாவை மீட்க இளவரசன் போலே குதிரையில் வருவன்னு நினைச்சா, ஜீப்லே வந்துருக்கப் போலே இருக்கு “ என்று ஏதோ சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டு இருந்தான்.

ப்ரித்வி கிருத்திகாவைப் பார்க்க அவள் மெதுவாகத் தலையசைத்தாள். ப்ரித்வி மெதுவாக முன்னோக்கி நகர்ந்து வர, அதைக் கண்டவன் சட்டென்று தரையை நோக்கிச் சுட்டான்.

“ப்ரித்வி , நான் விளையாடுகிறேன் என்று நினைத்தாயா?” என்றுக் கேட்கவும், ப்ரித்வி அசையாமல் நின்றான்.

பின், “கிருத்திகா , இதுவரை நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காமல் போனது இல்லை. உன் மேல் எனக்கு ஆசை எல்லாம் இல்லை. சும்மா பொழுது போக்காக மட்டும் தான் சீண்டினேன். ஆனால் அதற்காக நீ என்னை ஜெயிலில் நிற்க வைத்து விட்டாய். இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.