மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னிலெந்த
வகையினும் நமக்குள்ளே
தாதரென்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வமிந்த நாட்டிலே
"பவித்ரா பரீட்சை இருக்குல்ல, நல்லா படிச்சிட்டியா மா?" பாத்திரம் துலக்கி கொண்டிருந்த காவேரி பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த பவித்ராவை பார்த்து கேட்டார்.
"படிச்சிட்டேன் மா. இன்னைக்கு தான கடைசி பரிட்சை. அப்பறம் எனக்கு ஒன்றரை மாசம் லீவு. நானும் உனக்கு உதவிக்கு கூட வரட்டுமா மா?" இரட்டை பின்னலில் ரிப்பனை கட்டிக்கொண்டே கேட்டாள் பவித்ரா.
"எதுக்குடா? நான் செய்ற வேலை எல்லாம் நீ செய்ய வேண்டாம். என் ராசாத்தி...நீ படிச்சு பெரிய ஆளா வரணும். பதினொன்னாம் வகுப்பு சேர்ரதுக்கு நான் வேல பாக்கற வீட்டம்மா உதவி செய்றேன்னு சொல்லிருக்காங்க. அதுமட்டும் இல்லாம ஏதோ புது படிப்பாம்ல...அதான் பாப்பா டிவி பொட்டி மாதிரி இருக்கும்ல?" என்ன என்று காவேரி யோசிக்க, "கம்ப்யூட்டர் மா" ஆர்வமாக சொன்னாள் பவித்ரா.
"ஹான் அதான் அதான் அதுல சேர்த்து விடறேனு சொன்னாங்க. அதனாலா நீ படிக்கிற வேலையை பாரு. இதெல்லாம் நான் பார்த்துக்கறேன்" மகள் கிளம்பவும் எழுந்து வந்து தன்னுடைய புடவை முந்தானையால் மகளின் முகத்தை துடைத்து அங்கிருந்த சிறிய பொட்டை எடுத்து அவளின் நெற்றியில் ஒட்டிவிட்டு திருநீறு பூசிவிட்டாள்.
"நல்லா எழுதும்மா" பள்ளிக்கு செல்லும் மகளையே பார்த்து கொண்டிருந்த காவேரிக்கு அவளை நல்லபடியாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தீவிரமாக இருந்தது.
கடைசி பரீட்சை என்பதால் தேர்வு முடிந்ததும் மாணவர்கள் எல்லாம் கூடி பேசி கொண்டிருக்க தன்னுடன் படிக்கும் மாணவியிடம் கேள்வித்தாளை அலசி கொண்டிருந்த பவித்ரா, "பவித்ரா" என்ற குரலை கேட்டு திரும்பினாள்.
அங்கே நின்று கொண்டிருந்த மாரியப்பனை கண்டவள், "மாமா" என்றவாறு சிரிப்புடன் அவன் அருகில் சென்றாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Advance new year wishes to you and ur family💐