(Reading time: 9 - 18 minutes)
Kaarigai
Kaarigai

"என்ன மாமா ஸ்கூலுக்கு வந்துருக்கீங்க?" என்றவளை "சீக்கிரம் வா. வீட்டுக்கு போகணும்" மாரியப்பன் அவசரப்படுத்த, என்ன ஏதென்று புரியாமல் அவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனுடன் ஓடினாள்.

வீட்டை நெருங்குகையில் ஒரே கூட்டமாக இருந்தது. இவளுக்கு என்ன என்று புரியவில்லை. "ஏன் எல்லாரும் நம்ம வீடு முன்னாடி நிக்கிறாங்க? அம்மா எங்கே காணோம்?" யோசித்தபடி சென்றாள் பவித்ரா. வீட்டை நெருங்க நெருங்க, அவளுக்கு ஏனோ பயமாக இருந்தது. அதற்குள் அவளை கண்ட கண்ணம்மா ஓடி வந்து அவளை கட்டி கொண்டு அழ, அந்த பெண் புரியாமல் பார்த்தாள் அவளை.

"ஐயோ இப்படி ஆயிடுச்சே...அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? உன்னை இப்படி அனாதையாக்கிட்டானே..." அவள் அழுது புலம்ப, ஒரு வித பயத்துடனே முன்னே சென்றவள் கண்ணில் பட்டது  வீட்டு வாசலில் மாலையிட்டு தலைமாட்டில் விளக்கொன்றை ஏற்றி படுக்க வைத்திருந்த காவேரியை.

காவேரியின் உடலை சுற்றி அமர்ந்திருந்த அக்கம்பக்கத்தார் அவளை கண்டதும் பெருங்குரலெடுத்து அழ, நடுங்கும் உடலோடு தன் அன்னையின் அருகே சென்றாள்.

காலையில் பள்ளி செல்லுகையில் தன்னை உச்சி முகர்ந்து வாழ்த்தி அனுப்பிய அன்னை இப்பபோது உயிரற்ற உடலாக கிடப்பதை கண்டவளுக்கு நம்ப முடியவில்லை.

"அம்மா அம்மா எழுந்திருங்கம்மா. நீங்க சொன்ன மாதிரியே நான் பரீட்சை நல்லா எழுதிட்டேன் மா. எனக்கு முதல் மார்க் வரும் மா. எழுந்திருங்கம்மா..."அழுகையினூடே தன் அன்னையை உலுக்கி எழுப்ப முயல அவள் அன்னை எழுந்திருக்கவில்லை. வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர் மயங்கி சரிய, அக்கம் பக்கத்தோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக கூறியிருந்தனர்.

இரண்டு நாட்கள் கடந்து விட்டது. அம்மா இருந்தவரை அப்பாவை பற்றி கூட யோசித்ததில்லை. அவளை உலகம் தெரியாமல் சீராட்டி தாலாட்டி தான் வளர்த்தார் காவேரி. அவளுக்கு கஷ்டம் தெரியாது ராஜகுமாரி போல வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வளர்த்தவர் அறியவில்லை தன் வாழ்க்கை இப்படி இடையிலேயே முடியும் என. அவர் சீராட்டி வளர்த்த பெண் இப்போது அனாதையாக தவித்தது. அக்கம் பக்கம் உள்ளோர் எல்லாம் சடங்குகளை எல்லாம் பார்த்து கொண்டார்கள். இப்போது அவரவர்க்கு என வேலை இருந்தது. எல்லோரும் அன்றாடம் வேலை செய்தால் தான் அடுத்த வேலை சோறு எனும் நிலையில் இருக்கும் போது இவள் உடன் இருக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.