(Reading time: 9 - 18 minutes)
Kaarigai
Kaarigai

மற்றவர்களால் இயலவில்லை. அதனால் அடுத்து இருந்தவர் எல்லாம் ஒன்றாக கூடி அவளை ஏதேனும் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்க்கலாம் என்று முடிவெடுக்க "நான் என் கூட கூட்டிட்டு போறேன்' என்ற குரல் வர, எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

கண்ணம்மா அவனை முறைப்பதை சட்டை செய்யாமல் முன்னே வந்தான் மாரியப்பன். "நான் எங்க கூட கூட்டிட்டு போறேங்க. எனக்கு டவுனு பக்கம் வேலை வந்துருச்சு.எங்க கூடவே பவித்ராவை கூட்டிட்டு போறோம். எங்க பொண்ணு உமா கூட அவளையும் ஸ்கூலுக்கு அனுப்பறோம்." மாரியப்பன் சொல்ல, அங்கிருந்தோர் அவர்களுக்குள் ஏதோ பேசி கொண்டனர்.

"யோவ் உனக்கென்ன பைத்தியமா? நம்ம என்ன பெரிய பணக்காரங்க மாதிரி பேசற?" அவன் காதில் முணுமுணுத்தாள் கண்ணம்மா ஆத்திரத்துடன்.

"கண்ணம்மா அறிவில்லாம பேசாத. நம்ம கிட்ட காசு இல்ல தான். ஆனா காவேரி அந்த புள்ளைக்கு பத்து பவன் கிட்ட நகை பண்ணி வெச்சுருந்துருக்கு. அது மட்டும் இல்ல, இது பேருல ஏதோ சீட்டு சேர்ந்துருக்கு. நேத்து அந்த கெழம் பேசிட்டு இருந்துச்சு" மாரியப்பன் சொல்ல, உடனே வாயெல்லாம் பல்லானது கண்ணம்மாவுக்கு.

"அப்படியா யா. அதானே பார்த்தேன் என்னடா எலி ஆத்தோட போகுதேன்னு..." அதன் பின் கண்ணம்மா எதுவும் எதிர்ப்பாக பேசவில்லை.

"சரிப்பா, நீங்க சொந்தகாரங்க. நீங்களே மனசு வந்து கூட்டிட்டு போகறேன்னு சொல்றது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். காவேரி இந்த பெண்ணுக்காக சேர்த்த காசு கொஞ்சம், அப்பறம் ஒரு பத்து பவுனு நகையும் அது வேலை செய்ற வீட்டுக்கார அம்மா கிட்ட கொடுத்திருந்தது. அதை நான் உங்ககிட்ட கொடுக்கறேன். அதோட எதிர்காலத்துக்கு அது நல்லதா இருக்கும்." சொன்னவர் சொன்னதை போலவே செய்யவும் செய்தார்.

புது இடம், புது ஆட்கள், அன்னையின் இழப்பு என எல்லாமுமாக சேர்ந்து பவித்ராவை அவளின் துடுக்குத்தனத்தை இழக்க வைத்திருந்தது. அவளுடைய அத்தைக்கு அவளை பிடிக்கவில்லை என புரிந்தது. அம்மா இருக்கும் வரை பவித்ரா கண்ணு சாப்பிடறயா, எங்க வீட்ல இன்னைக்கு கரி கொளம்பு, வந்து சாப்பிட்டு போ என்றெல்லாம் பாசமாக பேசியவர் இப்போது ஏன் எல்லாவற்றிற்கும் திட்டுகிறார் என புரியவில்லை. வீட்டில் அவளை சிறு வேலை கூட செய்யாமல் பார்த்து கொண்டார் காவேரி. ஆனால் இங்கே வந்த ஒரு வாரத்திலேயே பாத்திரம் கழுகி, துணி துவைத்து கை எல்லாம் புண்ணாகி இருக்க, சமையல் வேலை செய்து அங்கங்கே சுட்டு கொண்டிருந்தாள். மாரியப்பன் வேலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.