(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 17 - சித்ரா. வெ 

முதல் செமஸ்டர் தேர்வுகளை நித்யா நன்றாகவே எழுதியிருந்தாள். கடைசி தேர்வையும் முடித்துவிட்டு ரமாவோடு வீட்டிற்கு கிளம்பும் போது, "பைனல் இயர் எல்லாம் ரெண்டு நாள் ஜாலியா டூர் போலாம்னு ப்ளான் செஞ்சுருக்காங்க போல, நீயும் தானே போற," என்று ரமாவிடம் நித்யா கேட்க,

"இல்ல நான் எங்கேயும் போகப் போறதில்ல, அவங்கக்கிட்டேயும் வரலன்னு சொல்லிட்டேன். லாஸ்ட் செமஸ்டர் முடிஞ்சதும் இப்படி ஏதாவது ப்ளான் போட்டா அப்போ போகலாம்," என்று அவள் பதில் கூறினாள்.

"இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு, அந்த நேரம் எப்படி இருக்குமோ, இப்போ ஜாலியா போயிட்டு வரலாமில்ல, ஏன் வரலன்னு சொல்லிட்ட?"

"இது அவங்க திடீர்னு போட்ட ப்ளான் ஆச்சே, நான் இந்த செமஸ்டர் லீவுக்கு என்னோட ஆள் கூட எஞ்சாய் செய்யலாம்னு முன்னமே ப்ளான் போட்டு வச்சிருக்கேன். பாவம் எக்ஸாம் அது இதுன்னு அவரை ரொம்பவே காய விட்டுட்டேன். அதுவுமில்லாம வேலை விஷயமா கொஞ்ச நாள் அவங்க வெளிநாடு வேற போறாங்க, அதான் இந்த லீவுக்கு அவங்க கூட எங்கேயாச்சும் வெளிய போலாம்னு ப்ளான் போட்டுருக்கேன். அதான் இந்த ட்ரிப் வர முடியாதுன்னு பசங்கக்கிட்ட சொல்லிட்டேன்.

எங்க ப்ரண்ட்ஸோட காலேஜ் லைஃபை எஞ்சாய் செய்யணும்னு தான் இருக்கு, ஆனா அதுக்குள்ள நமக்கு கல்யாணத்தை செய்து வச்சிட்டாங்களே, கல்யாணம் என்றாலே கூடுதலா பொறுப்புகள் வந்துடுதே, இப்படி சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதா போயிடுது. உண்மையிலேயே நாம ரொம்ப பாவம் தான்," என்ற ரமா,

"ஆமா இந்த லீவ் நீ என்ன ப்ளான் வச்சிருக்க?" என்று நித்யாவிடம் கேட்டாள்.

ரமாவாவது தேர்வு நேரத்தில் தான் கணவனை விட்டு தள்ளி இருந்தாள். ஆனால் கார்த்திக் அவள் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே தள்ளி நிற்கிறானே, அன்று வெளிப்படையாக கேட்டதற்கு டயர்டா இருக்கும், படிக்கணும் அது இது என்று சொல்லி சமாளித்தான். ஆனால் இந்த கல்லூரி விடுமுறை நாட்களில் என்ன சொல்வான். என்னத்தான் அவனே பக்குவமாக விலகி நின்றாலும், அவனுக்கு பாவம் செய்வது போல் அடிக்கடி அவளுக்கு தோன்றுகிறது. அதனால் இந்த விடுமுறையை அவனோடு தான் கழிக்க வேண்டுமென்று அந்தநேரம் அவளும் முடிவு செய்தாள்.

அவள் அமைதியாக வருவதை பார்த்த ரமா, "என்ன நித்தி? கேள்விக் கேட்டா யோசனைக்கு போயிட்ட?" என்றுக் கேட்க,

"அதான் நீ சொன்னீயே, காலேஜ் லைஃபை ஜாலியா கழிக்கிற நேரத்தில் கல்யாணத்தை செய்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.