(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

வச்சிட்றாங்கன்னு, இந்த லீவ் எங்க மாமா கூட தான் நேரத்தை செலவிடணும்," என்று  பதில் கூறினாள்.

"ஓ அங்கேயும் நான் சொன்ன நிலைமை தானா? ம் புரிஞ்சுது புரிஞ்சுது, எஞ்சாய்." என்று ரமா சொல்ல நித்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

இரவு சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்ததும், "மாமா எனக்கு செமஸ்டர் லீவ் விட்ருக்காங்க," என்ற தகவலை கார்த்திக்கிடம் நித்யா கூற,

"ம்ம் இத்தனை நாள் தூக்கத்தை ஒதுக்கி வச்சிட்டு படிப்பே கெதின்னு இருந்த, இந்த லீவ் நாளிலாவது ரெஸ்ட் எடு." என்று கார்த்திக் பதில் கூறினான்.

"ம்ம் இன்னைக்கு நல்லா தூங்க தான் போறேன். ஆனா டெய்லியெல்லாம் இப்படி இருக்க முடியாது. மாமா இந்த லீவ்க்கு எங்கேயாச்சும் ஜாலியா போயிட்டு வரலாமா?" என்றுக் கேட்க, கார்த்திக் தயக்கோத்தோடு மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

அவளாகவே கேட்டும் அதை மறுக்கும் சூழல் வந்ததை நினைத்து அவனுக்கே வருத்தமாக இருந்தது. முதல்முறை தேனிலவுக்கு எங்கே போகலாம்? என்று அவன் கேட்ட போது, ஊட்டி, கொடைக்கானல் என்று பதில் கூறினாளே, ஆனால் அதெல்லாம் பார்த்துவிட்டேன் என்று அப்போது சாதாரணமாக தட்டி கழித்துவிட்டான்.

ஆனால் அதற்குப்பின் பலமுறை, அந்த ஊரையெல்லாம் அவள் பார்த்திருக்க மாட்டாளே, அவளிடம் அப்படி கூறிவிட்டோமே என்றெல்லாம் வருந்தியவள், அவளை அந்த ஊருக்கெல்லாம் அழைத்துச் செல்ல வேண்டுமென்றெல்லாம் நினைத்திருக்கிறான் தான்,

இருந்தும் இப்போதைய சூழ்நிலை அதிக வேலைப்பளுவில் இருக்க, அவளை எங்கேயும் அழைத்துச் செல்ல முடியாத சூழலாக அமைந்திடவே, "சாரி பொண்டாட்டி, புது ப்ராஜக்ட் விஷயமா ரொம்ப பிஸியா போயிட்டிருக்கு. அங்க இங்க நகரக் கூட முடியாது. இல்லன்னா நீ கேட்கறதுக்கு முன்னமே உன்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போயிருப்பேன். இப்போ சுத்தமா அதுக்கு நேரமே இல்லை. இந்த பதிலைச் சொல்ல உண்மையிலேயே கஷ்டமா இருக்கு," என்று வருத்தத்தோடு கூறினான்.

"அய்யோ என்ன மாமா, இப்போ எதுக்கெடுத்தாலும் இப்படி ஃபீல் செய்ய ஆரம்பிச்சுட்றீங்க, உங்களோட சிட்டுவேஷன் சொன்னா என்னால புரிஞ்சிக்க முடியாதா? இப்போ என்ன நெக்ஸ்ட் செமஸ்டர் லீவ்ல பார்த்துக்கலாம், ஃபீல் செய்யாதீங்க மாமா." என்று அவளும் ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்.

"ம்ம் நீ புரிஞ்சிப்பன்னு தெரியும் நித்தி, ஆனாலும் நீ கேட்டும் உன்னை கூட்டிட்டுப் போக முடியாம போயிடுச்சேன்னு தான்," என்று அவன் தயக்கத்தோடு சொல்ல,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.