(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய்

Friends உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்... இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களையும், நலன்களையும் தர எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்...

க்தியும், மதியும் பக்க மதிலின் வழியாக உள்நுழைந்த அதே நேரத்தில் ஒரு கருப்பு நிறக்கார் வாயிற் கதவின் வழியாக உள்நுழைந்தது.....

“யாரு சக்தி இது... மணி பதினொண்ணு ஆகப்போகுது.... இந்த நேரத்துக்கு காலேஜ் உள்ள வர்றது... நாம வந்த வேலையை பாக்க விட மாட்டாங்க போல...”

“யாரோ நல்லாத் தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கணும் மதி சார்... அந்த செக்யூரிட்டி எந்த கேள்வியும் கேக்காம காரை உள்ள விட்டான் கவனிச்சீங்களா....”

“ஹ்ம்ம் பார்த்தேன் சக்தி... வா அந்த மரத்து பின்னாடி இருந்து அவங்க என்ன போறாங்கன்னு பார்க்கலாம்....”

சக்தியும், மதியும் அருகிலிருந்த  மரத்தின் பின் மறைந்து நின்று பார்க்க அந்த காரிலிருந்து கல்லூரியின் தாளாளரும் வேறு இருவரும் இறங்கினார்கள்...  இறங்கி வேகநடை நடந்து அலுவல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார்கள்...

“கதவை அடைச்சுட்டாங்களே மதி சார்... அவங்க எதுக்கு வந்தாங்கன்னு இப்போ எப்படி தெரிஞ்சுக்கறது....”

“நீங்க சொன்ன அந்த லேப்க்கு அவங்க போன வழியாத்தான் போகணுமா சக்தி...”

“இல்லை சார்.... அது அங்க தெரியுது பாருங்க ஒரு சிவப்பு கலர் ரூம்... அது வழியா போகணும்....”

“ஓ சரி வாங்க.... பின் பக்கம் வழியா போய் எதாச்சும் ஜன்னல் திறந்திருக்கான்னு பார்ப்போம்....”

இருவரும் சென்று சுற்றிலும் பார்க்க பின் பக்க ஜன்னல்களும், பக்க ஜன்னல்களும் மூடி இருந்தன...

“இப்போ என்ன மதி சார் பண்ண... அவங்க உள்ள என்ன பேசறாங்கன்னு கேக்க முடியாது போலியே...”

“என்கிட்ட ஒரு பென் கேமரா இருக்கு சக்தி... அதை அந்த கதவு கீழ வச்சு ரெகார்ட் செய்ய முடியுதா பார்க்கலாம்...”

“ஹ்ம்ம் அப்பவும் அவங்க பேசறது கேக்க முடியாதே மதி சார்...”

“இது நல்ல powerful கேமரா சக்தி.... அரை கிலோமீட்டர் சுத்தளவு வரை சவுண்ட் ரெகார்ட் ஆகும்.... அப்படியே இல்லாட்டாலும் அவங்க உதடு அசைவுகளை வச்சு அவங்க பேசறதை ஓரளவுக்கு கணிச்சுடலாம்.... ஆனா இப்போ அந்த செக்யூரிட்டி கண்ணுல மாட்டாம எப்படி நாம ரூம்க்கிட்ட போகன்னுதான் பார்க்கணும்....”

:”அந்த கவலையை விடுங்க மதி சார்.... அதை நான் பாத்துக்கறேன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.