“நான் இங்க வந்தது தமிழ்நாட்டு கலாச்சாரத்தை பத்தி புக் எழுதன்னு சொன்னதால ஒரு பிரச்சனையும் இல்லை... அதனால வெளிய போனாலும் வந்தாலும் யாரும் எந்த கேள்வியும் கேக்கறது இல்லை... யாரை பார்த்தாலும் சந்தேகமும் வர்றதில்லை... எல்லாம் பக்காவா போகுது.... நீங்கதான் கடைசி... நாளைக்கு காலைல விமானம் ஏற வேண்டியதுதான்.... நீங்க சரக்கு எடுத்திட்டு வந்துட்டீங்களா.....”
அந்த வெள்ளைக்காரர் கேட்க, தாளாளர் மூன்று பெட்டிகளைக் கொடுக்க அதைத் திறந்து சரி பார்த்த பின், தன்னருகிலிருந்த பெட்டியை எடுத்து நீட்டினார் அந்த வெள்ளைக்காரர்... பின் அதை தாளாளர் திறந்து சரிபார்க்க அதனுள் இருந்தது அனைத்தும் வெளிநாட்டு பணம்.... இரண்டு பக்கமும் சரியாக இருந்ததால் வெள்ளைக்காரரிடம் சொல்லிக்கொண்டு தாளாளரும், அவருடன் வந்தவர்களும் கிளம்பும் வரை அடுத்த வீடியோவில் பதிவாகி இருந்தது.....
“பெரிய லெவெல்ல ஏதோ டீலிங் போல இருக்கே மதி சார்... அந்த பெட்டியைப் பார்த்தா கோடிக்கணக்குல பணம் கை மாறி இருக்கும் போலவே... அப்படி என்னதான் அந்தப் பெட்டில இருந்து இருக்கும்... அந்த வெள்ளைக்காரன் பெட்டியை திறந்தவன் அதுக்குள்ள இருந்த சாமானையும் வெளிய எடுத்து இருக்கலாம்....”, சக்தி கூற மதி ஏதோ யோசைனையிலேயே இருந்தார்...
“என்ன சார் யோசிக்கறீங்க....”
“இல்லை சக்தி... இது பெரிய விஷயம்... உடனடியா நான் அக்ஷன் எடுத்து ஆகணும்... அந்த வெள்ளைக்காரன் நாளை காலைல கிளம்பறேன்னு சொன்னான் இல்லை... அதுக்குள்ளே அவனை அர்ரெஸ்ட் பண்ணி ஆகணும்... ஆனா அவனை அர்ரெஸ்ட் பண்ணினா மத்தவங்க அலெர்ட் ஆகிடுவாங்க... அதுதான் யோசிக்கிறேன்....”
“ஆமாம் சார்.... அதுவும் வெளிநாட்டுக்காரனை அர்ரெஸ்ட் பண்ணினா இன்னும் பெரிய விளம்பரம் ஆகிடும்...”
“இதை வேறு விதமாத்தான் கையாளணும்....”
“சார் இத்தனை நாளா மண்டைய பிச்சுட்டு இருந்த மணி கேஸ் இப்போ ஒரு மாதிரி முடிஞ்சு போச்சு... அடுத்து அந்த பொண்ணு தற்கொலை பண்ணினதும் இவங்கதான்னு ப்ரூவ் பண்ண நமக்கு ஏதாவது சாட்சி கிடைக்கணும்....”
“அதுக்குத்தான் கண்ணால பார்த்த சாட்சி இருக்கே.... அதுவே போதும்...”
“சரி சார் நீங்க இங்க அடுத்து அந்த வெள்ளைக்காரனை என்ன பண்ணன்னு பாருங்க... நான் இப்போ கிளம்பி அந்த டாக்டர்ஸ்க்கிட்ட வாக்குமூலம் வாங்க முடியுதான்னு பார்க்கறேன்....”