(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

மதியிடமிருந்து பென் காமெராவை வாங்கிய சக்தி அதை எப்படி இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மரங்களின் ஊடாக இருளில் மறைந்து நடந்து அங்கிருந்த சிறிய சுவரைத் தாண்டி குனிந்தபடியே நடந்து தாளாளர் சென்ற அறையின் வாயிலில் இருந்த கதவின் பக்க வாட்டில் தரையில் அறையின் உள் தெரியும்படி வைத்து கேமரா பென்னை on செய்தான்...

பின்னர் உள்ளே பேசுவது ஏதேனும் கேட்க முடிகிறதா என்று பார்க்க அது குளிரூட்டப்பட்ட அறையாக இருந்ததால் அவனால் ஒன்றையும் கேட்க முடியவில்லை... போக வழியாகவே மீதும் மதி இருக்கும் இடம் வந்தடைந்தான் சக்தி....

“என்னாச்சு சக்தி... வச்சுட்டீங்களா... ஒண்ணும் பிரச்சனை இல்லையே..”

“இல்லை மதி சார்... நாம இங்கயே இருப்போமா... இல்லை அந்த லேப் போய் பார்ப்போமா...”

“இங்கேயே வெயிட் பண்ணுவோம் சக்தி.... திடீர்ன்னு யாராச்சும் அந்த லேப் பக்கம் வந்தாங்கன்னா மாட்டிப்போம்....”, மதி சொல்ல அங்கேயே காத்திருக்க ஆரம்பித்தார்கள்....

ஒரு மணி நேரம் கடந்த பிறகு அங்கிருந்த கதவு திறந்து வெளிவந்த மூவரும் அந்த லேபை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்....

“நல்ல வேளை நாம லேப் சைடு போகலை.... இல்லை கண்டிப்பா மாட்டி இருப்போம்.... அங்க ஒழிய இடம் கூட இல்லை... மதி சார் நான் போய் அவங்க வர்றதுக்குள்ள அந்த கேமரா எடுத்துட்டு வர்றேன்....”, சக்தி சென்று அந்த கதவில் பொருத்தி இருந்த பென் காமெராவை எடுத்து வந்து மதியிடம் தந்தான்.... திரும்பவும் உள் சென்றவர்கள் வெளி வர இருவரும் காத்திருந்தார்கள்..... அடுத்த அரை மணி காத்திருக்குப்பின் லேபின் உள் சென்ற மூவரும் வெளிவர அவர்கள் கைகளில் ஆளுக்கொரு பெட்டி புதிதாக முளைத்திருந்தது....

“சக்தி உள்ள இருந்து ஏதோ எடுத்துட்டு போறாங்க போல... இப்போ லேப் செக் பண்றதை விட அவங்க அடுத்து எங்க போறாங்கன்னு பார்க்கறதுதான் முக்கியம்... வா அவங்களை பின் தொடர்ந்து போகலாம்.....”, இருவரும் தாளாளரின் காரை பின்தொடர ஆரம்பித்தார்கள்... தாளாளரின் கார் ஒரு ஐந்து நட்ச்சத்திர விடுதியை அடைந்தது....

அதிலிருந்த மூவரும் இறங்கி லிப்ட்டில் பயணிக்க, சக்தியும் மதியும் வேகமாக படி வழியாக அவர்களைத் தொடர ஆரம்பித்தார்கள்... லிப்ட் ஏழாம் தளத்தில் நிற்க அதிலிருந்து வெளிப்பட்ட மூவரும் அங்கிருந்த ஒரு அறையின் வாயிலை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினார்கள்.... கதவு திறக்கப்பட்டு உள்ளிலிருந்து ஒருவன் வந்து அவர்கள் மூவரையும் அழைத்து சென்றான்...

“என்ன சார் இங்கயும் அதே பென் கேமரா வச்சுத்தான் ரெகார்ட் பண்ணனும் போல...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.