(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“வேற வழி... நான் போய் வச்சுட்டு வரேன்...”, மதி கதவினருகில் சென்று வைத்துவிட்டு வந்தார்....

“சக்தி இங்க ஹோட்டல் பாய்ஸ் வந்து போயிட்டு இருப்பாங்க.... ஒரே இடத்துல நின்னு அவங்களை கண்காணிக்க முடியாது... ரெண்டு தளம் இறங்கினா ரெஸ்ட்டாரண்ட் வருது.... அது வாசல் பார்த்தா மாதிரிதான் இருக்குது... அங்க போய் வெயிட் பண்ணுவோம்...”, இருவரும் சென்று காபி அருந்தியபடியே வாசலை கண்காணிக்க ஆரம்பித்தார்கள்....

“சார் அங்க பாருங்க மூணு பேரும் கிளம்பறாங்க... இப்போ அவங்களை எப்படி பின் தொடர்ந்து போக.... பென் கேமரா வேற எடுக்கணும்...”

“கவலைப்படாதீங்க சக்தி... அவங்களை பின் தொடர ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு.... நாம கேமரா எடுத்துட்டு அடுத்து அவங்க எங்க போறாங்க பார்க்கலாம்....”, சக்தியும், மதியும் அறையின் அருகில் சென்று காமெராவை எடுத்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினார்கள்.... தாளாளரும், மற்றவர்களும் அவர்கள் இல்லம் திரும்பியதாக தகவல் மதிக்கு வர மதியும், சக்தியும் பென் காமெராவில் பதிவாகியதை பார்க்க மதியின் இல்லம் நோக்கி சென்றார்கள்...

மதியின் இல்லம் அடைந்து அங்கிருந்த பிளேயரில் பென் கேமராவைப் பொருத்தி அதை ஓட விட்டார் மதி.... தாளாளரும் மற்றவர்களும் பேசுவது அதில் வர ஆரம்பித்தது...

“சார் எனக்கு யாரோ நம்மளை கண்காணிக்கற feel சில நாளா வருது... ஒரு மாதிரி மாட்டிக்க போகிறோம்ன்னு பயமா இருக்குது... ஏன்னு தெரியலை....”

“என்ன டாக்டர் இது... எத்தனை வருஷமா இந்த வேலை பண்ணிட்டு இருக்கோம்.... இத்தனை நாள் இல்லாம இப்போ என்ன....”

“இல்லை சார்... இப்போ சில நாளாத்தான் இப்படி தோணுது… நாம கொஞ்ச நாளைக்கு இதெல்லாத்தையும் நிறுத்தி வச்சா என்ன....”

“என்ன விளையாடறீங்களா டாக்டர்... அப்படி எல்லாம் திடீர்ன்னு நிறுத்த முடியாது... கோடிக்கணக்குல நடக்குற பிசினஸ்... அதுவும் இல்லாம இது புலி வாலை பிடிச்ச கதைதான்... நாம வாலை விடணும்ன்னு நினைச்சாலே நம்மளை போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க...”

“நீங்க சொல்றதும் சரிதான் சார்... ஆனா நாம இன்னும் கொஞ்சம் கண்காணிப்பா இருக்கறது நல்லது...”

“ஹ்ம்ம் கண்டிப்பா டாக்டர்.... அது வேணா பண்ணிடலாம்... அப்பறம் இன்னைக்கு பார்ட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.