செல்வம் கைகளில் ஸ்க்ரூ டிரைவர் பார்த்துக் கிருத்திகா திகைத்தது சில விநாடிகள்தான். அவன் கைகள் ஓங்கி கிருத்தி நோக்கி வரவும், சட்டென்று குனிந்து விட்டாள். கிருத்திகா குனிந்ததில் அவள் சுவாசக் குழாய்க்கு வைத்தக் குறி தவறி, கழுத்தின் ஓரத்திற்கு சென்று விட்டது.
வேகமாக என்றாலும் அழுத்தமாகக் குத்தியிருக்கவே , ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நிலையிலும் தளராத கிருத்திகா, தன் சுடிதார் துப்பட்டாவை வைத்து ரத்தம் வந்த இடத்தில் அழுத்தினாள். அதற்குள் அவர்கள் காரின் பக்கம் வந்து இருந்த ப்ரித்வி , செல்வம் பக்கம் செல்லாமல் கிருத்தி இருந்தப் பக்கம் உள்ளக் கண்ணாடியை உடைத்தான்.
அவன் செயலைக் கண்ட செல்வம் மேலும் ஆத்திரத்தில், மீண்டும் ஸ்க்ரூ டிரைவர் வைத்து அவளைத் தாக்க வர, கிருத்தி தன் கை முட்டியால் அவன் மூக்கில் குத்தினாள். அதில் அவன் தடுமாற, அதற்குள் கிருத்திப் பக்கம் இருந்த டோரைத் திறந்து இருந்தான் ப்ரித்வி.
கிருத்தியை வெளியே இழுத்து, அவளை அருகில் இருந்தத் தன் காரில் ஏற்றினான் ப்ரித்வி. அதற்குள் செல்வம் தன் துப்பாக்கியை எடுத்து ப்ரித்வியை நோக்கி குறிப் பார்க்க, அதைக் கவனித்த கிருத்தி,
“ப்ரித்வி” என்றுக் குரல் கொடுத்தாள்.
சட்டென்று திரும்பவும், அவனின் கைகளை உரசி குண்டுச் சென்றது. ப்ரித்வி வேகமாக செல்வத்தின் அருகில் சென்று அவனை வெளியே இழுத்து, அடிக்க ஆரம்பித்தான்.
செல்வம் போதை மருந்து எடுத்து இருந்தாலும், அவனுக்கு பலமே அந்தப் போதை மருந்து தான் என்பதால், இன்னும் மூர்க்கமானான் . அதனால் ப்ரித்வியிடம் அடி வாங்கினாலும், அவன் சுற்றுப் புறத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தான்.
ப்ரித்வியின் அடியில் சற்றுத் தள்ளிப் போய்ச் செல்வம் விழ, அவன் அருகில் ஒரு இரும்புக் குழாய் ஒன்று இருந்தது. அதைக் கையில் எடுத்தப் படி கிருத்தியை நோக்கி ஓடினான் செல்வம்.
தன்னைத் தாக்க வருவான் என்று நினைத்த ப்ரித்வி, கிருத்தியை நோக்கி அவன் செல்லவும், வேகமாக அவர்களுக்கு இடையில் சென்று நின்றான்.
உடனே தன் இலக்கை மாற்றிய செல்வம், ப்ரித்வியைக் குழாயால் தாக்க ஆரம்பித்தான். ப்ரித்வி அதை சமாளித்தப் படி , செல்வத்தைத் தடுத்துக் கொண்டு இருந்தான்.
அதற்குள் ப்ரித்வியோடு வந்து இருந்த காவல்துறை வீரர்கள் செல்வத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதற்குப் பின் கிருத்திக்கு முதலுதவிக் கொடுத்தனர்.
ஆனால் ரத்தம் தொடர்ந்து வரவும், அவளை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Past and present situaltion vilakiya vidham arumai.
Selvam ku sariyaana mudivu.
Thavaru seyyum nabargal thandanai ku uruyavargal.
Krithi, prithvi ku adi pattathu, so sad.
But they escaped. Thank god.
Krithika, prithviraj rendu perin wave length nalla othu poghuthu.
Prathap ivanga marriage pathi nalla mudivu edupaara?
Waiting.
Prince yenapa ninga ippadi oru question ketkuringa
Happy and prosperous new year.
when reading this story, i am totally into that world. Liked it.you related the past and present events in a good manner. All the best for your future.
Happy new year