(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“உன்னுடையக் கனவுப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாயே. அதன் பின்னான நிகழுவுகளைப் பற்றி உனக்கு என்னத் தோன்றியது?” என்றுக் கேட்டான்.

“அநேக நேரத்தில் அந்தக் கிரண் தேவிதான் என் உள்ளுணர்வாக இருந்து, எனக்கு தைரியத்தைக் கொடுத்து இருக்கிறாள் என்றுத் தோன்றியது”

“ஹ்ம்ம். வேறு..?”

“ரானாவைப் போன்ற வீரர்கள் நிறைந்து இருந்தும், நம் தேசம் சில நூற்றாண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்ததே என்று வருத்தம் தோன்றியது”

“உண்மைதான். ராணா போன்ற வீரர்கள் தான் இன்றைக்கு எல்லையில் நின்று நமக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்”

“என் கனவைப் பற்றிச் சொல்லி முடித்தப் பிறகு, உங்களுக்கும் அந்தக் கனவுக் காட்சிகள் தோன்றியதா?”

“ஆமாம். அதிலும் இன்றைய நாள் முழுதும் அது கனவாக இல்லாமல், உன்னைத் தொடர்ந்து செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் , இதற்கு முன் சென்ற எண்ணமும், அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளும் கண் முன் தோன்றின.”

“அப்படி என்றால் கிரண் தேவியின் முடிவும், இளவரசனின் முடிவும் உங்களுக்கும் உணர முடிந்ததா?”

“ஆமாம். “

“அப்போது உங்களுக்கு என்னத் தோன்றியது?”

“இந்த அழகான ஜோடியைப் பிரித்த அந்த கரணி மாதாவின் மேல் கோபம் வந்தது. உனக்கு என்னத் தோன்றியது?”

“அதற்கடுத்தப் பிறவிகளிலாவது அவர்கள் இணைந்து இருப்பார்களா என்றுத் தெரிந்துக் கொள்ளத் தோன்றியது”

“ஹ்ம்ம். எனக்கும் அதே எண்ணம் தான். அவர்களைப் போன்ற வீரமும், விவேகமும், நாட்டுபற்றும் கொண்டவர்கள் வாழ்வில் இணைய முடியாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. அவர்கள் காலத்தில் அந்த மன்னர்கள் என்றால், தற்போது செல்வம் போன்ற அயோக்கியர்கள். இவர்களால் எத்தனை பேர் வாழ்க்கை வீணாகி விடுகிறது?’

“ஆம் இளவரசே” என்றுக் கூறிவிட்டு பின்னர் திடுக்கிட்டு விழித்த கிருத்தியைப் பார்த்து சிரித்தான் ப்ரித்விராஜ்

“சாரி பாஸ். கிரண், இளவரசரே என் மனதிற்குள் சுற்றிக் கொண்டு இருப்பதால், அப்படிக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.