Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Uravendru vantha kadhal
Pin It

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகா

தாத்தா நல்லசிவத்தின் செல்ல மகளான வள்ளி தன் ஊரான மதுரையைவிட்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சிதம்பரத்தோடு 25 வருடங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் குடியேறினார். வள்ளி இராமேஸ்வரத்தில் இருப்பது பலருக்குத் தெரியாது அது நல்லசிவம் தாத்தாவிற்கு தெரிந்திருந்தும் வேறு யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.

வள்ளிக்கும் அவளது கணவர் சிதம்பரத்திற்கும் 2 வருடங்கள் கழித்தே மகள் பிறந்தாள். ஒரே மகள் பெயர் வைஷ்ணவி தற்போது அவள் வயது 23.

வள்ளி தன்னுடைய மாமியார் மங்களம் சொல்படி கணவனே கண் கண்ட தெய்வமாக எண்ணி வாழ்க்கையை வாழ்பவர். மங்களத்திற்கு பேத்தி வைஷ்ணவி என்றால் உயிர். வைஷ்ணவி தன் தாயின் ஜாடையை அப்படியே உரித்து பிறந்து இருந்தாள். அழகானவள். டிகிரி முடித்து கம்ப்யூட்டர் கோர்ஸில் சிலதையும் படித்திருக்கிறாள்.

அது மட்டுமல்ல சமையல், கோலம் போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் அவளுக்கு பாட்டி கற்றுக் கொடுத்திருக்கிறார். பாட்டியின் வளர்ப்பின் காரணமாக எளிமையாகவும் பார்க்க கிராமத்து பெண்ணாகவும் இருப்பாள். மாடர்ன் கலாச்சாரம் ஒன்று கூட அவளிடத்தில் பார்க்க முடியாது. மென்மையானவள் தன் தாயை போன்றே.

வள்ளியின் சாயலில் இருந்த காரணத்தினாலோ என்னவோ ஆதிக்கு வைஷுவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது, தன் சார்பாக பேசினாளே தன்னை தேடி வந்தாளே அதோடு அவளை பார்க்கையில் யாரோ ஒரு நெருங்கிய நபரின் நினைவுகள் வருவதால் ஆதிநாதன் ரயில்வே நிலையம் முழுவதும் அவளை கண்களால் அலசி தேடிவிட்டான் ஆனால் வைஷ்ணவியோ எங்கும் தென்படவில்லை அதோடு பெருமூச்சை விட்டபடியே வெளியேறினான். அங்கு நிறைய ஷேர் ஆட்டோக்கள் இருப்பதைக் கண்டவன்

”ஏலம் நடக்கற இடத்துக்கே போயிடலாம் வந்த ஜோலியை முடிச்சிட்டு நேரா ஊருக்கு போறதுதான் நல்லது” என நினைத்தபடியே ஒரு ஆட்டோவிடம் சென்றான்

அதில் இருந்த வைஷ்ணவியைக்கண்டு திகைத்தான் ஆதி. அவளும் அவனைக்கண்டு திகைத்தபடியே ஒரு புன்னகை வீச ஏதோ பல நாள் பழகியது போல ஆதியும் அவளைக் கண்டு புன்னகைத்தான் அது பொறுக்க முடியாத ஆட்டோ டிரைவரோ

”அண்ணா எங்கண்ணா போகனும்” என கேட்க உடனே ஆதியின் கவனம் சிதறியது. அவன் டிரைவரிடம் தான் செல்லும் முகவரியைக்கூற அவனோ

”ஏறுண்ணா போற வழிதான் உன்னை இறக்கிட்டு அப்புறம் அவங்களை இறக்கிவிடறேன்” என சொல்ல ஆதியோ தயங்கினான்.

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகாJebamalar 2020-01-03 14:44
Sema story sis... Full story ah kodutha kooda padichu முடிச்ச piragu than next work parka thonum... Ovoru storyum ovoru vithama supera iruku.. Thanks sisy
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகாVinoudayan 2020-01-02 22:51
Good flow and nice epi sis :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகாSadhi 2020-01-02 21:14
Nice..
Reply | Reply with quote | Quote
# உறவென்று வந்த காதல் -03Ravisandhiya 2020-01-02 18:54
Sema interesting epi sis nice update :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகாmadhumathi9 2020-01-02 18:07
wow fantastic epi sasi (y) :thnkx: :thnkx: big :thnkx: 4 big epi.29 pages padiththa maathiri illai sasi.seekkiram mudinthu vittathu.arumai kathai vegamaaga,viruviruppaaga pogirathu :clap: :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL: :-) aduththa vaaram Thursdaykkaga wait pannikkittu irukkiren. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகாதீபக் 2020-01-02 17:52
wow nice episode sis :clap: . The small fight between them is so super (y) . Vaishnavi is so childish behaviour. Good flow. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top