இருக்கும் போது பத்தோடு பதினொன்றாகத் தானே நடத்தி இருப்பார் என்று நினைத்தேன்?”
“உண்மைதான். “
“உயிரோடு இருக்கும் போது ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவரால், அவள் இறந்தப் பின் கட்டும் இந்த மாளிகை, அவள் ஆத்மாவிற்கு சாந்திக் கொடுத்து விடுமா என்ற கேள்வி தோன்றியது”
“ஆம். உயிரோடு இருக்கும்போது காட்டபடாத அன்பு, அவள் இறந்தப் பின் ஏற்றுக் கொள்ள முடியாதது”
இதைப் போன்ற மேலும் சில பேச்சுக்கள் பேசி முடித்தப் பின், இருவரின் சிந்தனைகளும் ஒத்து இருப்பதை இருவராலும் உணர முடிந்தது. மாறுபட்டக் கருத்துக்கள் இருந்தாலும், அதை கன்வின்ஸ் செய்ய முயற்சிக்காமல், அப்படியே ஏற்றுக் கொண்டதை இருவருமே உணர்ந்து இருந்தனர்.
இந்த உணர்வுகளோடு கிருத்தியின் காலேஜ் டூர் முடிய, எல்லோரும் தங்கள் இருப்பிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டு இருந்தார்கள்.
அவரவர்கள் அனுபவங்களை நகைச்சுவை, சோகம், சந்தோஷம் என எல்லா வகையிலும் வெளிபடுத்திக் கொண்டவர்கள், வரும்போது இருந்ததை விட, செல்லும் போது இன்னும் அவர்களின் ஆட்டம் பாட்டங்கள் இருந்தன.
சென்னை வரவும், ஸ்டேஷனில் இருந்து அவரவர் திரும்பிச் செல்ல ஆரம்பித்து இருக்க, கிருத்திகாவை அழைத்துச் செல்ல பிரதாப் வந்து இருந்தார்.
ப்ரித்வியிடம் கைக் குலுக்கி
“தேங்க்ஸ் ப்ரித்வி. உங்களோட இந்த உதவி என்றைக்கும் மறக்க முடியாது” என்றுக் கூற,
“இது என்னுடைய கடமை சார்” என்று பதில் கூறினான் ப்ரித்வி.
பின் கிருத்திகா அவனிடம் விடைப் பெற்றுச் செல்ல, ப்ரித்வியும் தங்கள் வீட்டிற்குச் சென்றான்.
வீட்டிற்குச் சென்றப் பின் இரண்டு நாட்கள் நன்றாக ரெஸ்ட் எடுத்தப் பின், கிருத்திகா டூர் கதைகள் எல்லாம் கூற, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் ப்ரித்விராஜ் பாஸ், பிரின்ஸ் , ப்ரித்வி என்று இடம் பெற்றான்.
இதை அவள் அம்மாவும், பிரதாப்பும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ப்ரித்விக்கோ தன் அன்றாட வேளைகளில் திரும்பி விட்டாலும், கிருத்தியின் நினைவு வந்து சென்றது. இத்தனை நாள் பழக்கமாக, அவன் வெளியில் செல்லும் வேளைகளில் எல்லாம் கிருத்திகா எங்கே என்று கவனிப்பது போல் அவனை அறியாமல் அவளைத் தேடினான்.
ஹாய் பிரெண்ட்ஸ், காணாய் கண்ணேவின் பென்அல்டிமேட் எபிசொட் இது. இதற்குப் பிறகு கிருத்திகா, ப்ரித்வி இணைப்போடு கதை நிறைவு பெறும். மிகச் சரியாக ஓராண்டு இந்தக் கதையோடு பயணித்து இருக்கிறேன். கதையில் எங்காவது மிஸ் லீட் போன்று தோன்றி இருந்தால் தெரியபடுத்துங்கள். அதை கடைசி எபிசோடில் விளக்கி விடுகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு மிகுந்த நன்றிகள்
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்!
Go to Kaanaai kanne story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.