(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கூறினேன்” என்றாள்

சிரித்தபடி “அதைப் பற்றி ஒன்றுமில்லை” என்றவன் , “நான் உன்னிடம் ஒன்றுக் கேட்கலாமா?” என்றுக் கேட்டான்

“கேளுங்க பாஸ்” என்றாள்.

“இந்தக் கனவிற்குப் பின் , உனக்கு நீதான் கிரண் தேவி என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா? அல்லது உணர்ந்து இருக்கிறாயா?”

“ஹ்ம்ம். பல சமயங்களில் அப்படி உணர்ந்து இருக்கிறேன். அதை விட கிரண் தேவிக்குள் உண்டான கோபம், பரிதாபம், வீரம் பாசம் எல்லாம் எனக்குள்ளும் உணர்ந்து இருக்கிறேன்”

“ஒருவேளை முன்னொரு ஜென்மத்தில் நீயே ஏன் கிரண் தேவியாக இருந்து இருக்கக் கூடாது?”

அவனின் கேள்வி புரியாமல் கிருத்திகா பார்க்க, அவளின் பார்வை உணர்ந்து மேலும் பேசினான்.

“கிருத்தி, கிரண் தேவியின் சபதப்படி ஏதோ ஒரு ரூபத்தில் மக்களைக் காத்து வருபவள், உனக்கு மட்டும் அவர்களின் வாழ்க்கையும் உணர்த்தி இருப்பது ஏன் ? என்று யோசித்து இருக்கிறாயா?”

கிருத்தியின் கண்கள் யோசனையில் செல்லவும், அவள் யோசிக்கட்டும் என்று விட்டு விட்டான்.

“ஓகே. இதைப் பற்றிப் பொறுமையாகச் சிந்தித்துப் பார். இப்போது போய் நன்றாகத் தூங்கு. இன்றோடு உனக்குக் கனவு வருவதும் நின்று விடும் என்று நம்புகிறேன். காலையில் பார்க்கலாம். குட் நைட்” என்றுக் கூறிவிட்டுச் சென்று விட்டான்.

கிருத்தியும் அவன் சொன்னதை யோசித்தபடிச் சென்றுப் படுத்தவளுக்கு மன உளைச்சலிலும், காயத்தினாலும் அசதியில் தூங்கி விட்டாள்.

அன்றைய இரவில் அவளுக்கு எந்தக் கனவும் வரவில்லை. மறுநாள் காலையில் எழுந்து அன்றோடு டூர் முடிவதால் எல்லோரும் தங்கள் லக்கேஜ் சரி பார்த்து எடுத்து வைத்தனர்.

பகலில் கிளம்பி ஆக்ராவிற்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். சிலர் கோவில் தெய்வத்தைப் போல் பார்க்க, சிலரை வெறும் கலைக் கண்ணோடு பார்த்து விட்டுச் சென்றனர்.

கிருத்திகா ஓரிடத்தில் நின்று ஏதோ யோசனையில் இருந்தாள். அவள் அருகில் வந்த ப்ரித்வி,

“என்ன யோசனை கிருத்திகா? “என்றுக் கேட்டான்.

“இல்லை. தாஜ்மஹால் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்?”

“அதில் என்ன ?”

“ஷாஜகான் மும்தாஜ்க்கு இறந்தப் பின் இப்படி ஒரு சிறப்பைக் கொடுத்தவர், அவள் உயிரோடு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.