(Reading time: 11 - 21 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“டேய் இவங்களை எல்லாம் எங்கடா கடத்தி வச்சிருக்கீங்க.... மரியாதையா அவங்களை விட்டுடுங்க.....”

“மாப்பு ஏன் திரும்ப திரும்ப காமெடியாவே பேசறீங்க... நீங்க சொன்ன உடன விடவா கஷ்டப்பட்டு கடத்தி வச்சிருக்கோம்... இப்போ பதில் சொல்ல ரெடியா... நாங்க கேக்கற கேள்விக்கு முப்பது வினாடில பதில் வந்திருக்கணும்... அதை தாண்டிச்சு உங்க பசங்க உடம்புலேர்ந்து ஒரு ஒரு உறுப்பா வெளியே எடுத்து சகாய விலையில் விற்கப்படும்... புள்ளீங்கோ பாடி பார்ட்ஸ் காலி ஆன உடனே அண்ணிஸ்து”, சந்தோஷ் சொல்ல தங்கள் பிள்ளைகளின் அருகில் டாக்டர் உடையில் தயாராக இருந்தவர்களை பயத்துடன் பார்த்தார்கள்.....

“உங்க கேள்வியை ஆரம்பிங்க... நாங்க பதில் சொல்றோம்...”

“இது நல்ல புள்ளைக்கு அழகு....”

“நீங்க எத்தனை வருஷமா இங்க வேலை செய்யறீங்க.....”

“நாங்க மூணு பேருமே இந்த காலேஜ்லதான் மெடிசன் படிச்சோம்... மேற்படிப்பு முடிஞ்சு இங்க வேலைக்கு சேர்ந்துட்டோம்...”

“ஹ்ம்ம் இங்க மோஸ்ட்லி நடக்கற அறுவை சிகிச்சை எல்லாம் நீங்க மூணு பேருதான் பார்க்கறீங்க கரெக்ட்டா...”

“ஆமாம், மகப்பேறும், குழந்தைங்க  மட்டும் தனிப்பிரிவு... அதுக்கு வேற டாக்டர்ஸ் வருவாங்க...”

“ஹ்ம்ம் நாங்க உங்களை கடத்திட்டு வர்றதுக்கு முன்னாடி அங்க யாருக்கு அறுவை சிகிச்சை பண்றதா இருந்தீங்க....”

“அது அந்த பூபாலோட அப்பாக்கு சிறுநீரகம் இயங்கலை... அதுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பண்ணி பூபாலோட கிட்னியை எடுத்து அவருக்கு போருத்தறதா இருந்தோம்....”

“ஓ அப்படியா... அப்போ அவங்க ரெண்டு பேருதானே அந்த ரூம்ல இருக்கணும்... இன்னொருத்தர் எப்படி அந்த ரூம்ல இருந்தாரு....”

“அது... அவர்  பக்கத்து ரூம்ல வேற அறுவை சிகிச்சை பேஷன்ட்... சிஸ்டர் தவறுதலா ஸ்ட்ரெச்சர் இங்க கொண்டு வந்துட்டாங்க... அதுதான் ரூம் மாத்தினோம்....”

“நீங்க ரூம் மாத்தினா மாதிரி தெரியலையே.... ஆளையே இல்லை மாத்தி இருக்கீங்க....”

“என்ன சொல்றீங்க...”

“மொதல்ல பூபாலும், அவனோட அப்பாவும் ரூம்க்கு வந்தாங்க.... அதன் பிறகு பூபாலோட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.