(Reading time: 11 - 21 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

அப்பாவை பக்கத்து ரூம்க்கு மாத்திட்டு ஷேக் இல்லை இங்க வந்தாரு...”

“இல்லை அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை... நீங்க எதுவோ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க....”

“நீங்க அந்த ரூம்க்குள்ள நுழைஞ்சதுலேர்ந்து கடைசியா பூபாலோட அப்பாவை ரூம் மாத்தினது வரை முழு ரெகார்டிங் இருக்கு... அந்த படத்தை ஒட்டாவா...”

“மாப்பிள்ளை சார்... உங்க பின்னாடி ஒரு நர்ஸ் நின்னுட்டு இருந்தாங்களே.... அது வேற யாரும் இல்லை... நானேதான்... ஷேக்கோட ஒரு selfie வேற எடுத்து வச்சிருக்கேன்... பார்க்கறீங்களா... என்ன அதுல என்னோட சிக்ஸ்டீன் இயர்ஸ் சிக்ஸ்டி இயர்ஸா தெரியும்... அவ்வளவுதான்....”, சந்தியா சொல்ல மூன்று டாக்டர்களும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள்....

“அது மட்டும் இல்லை... உங்ககிட்ட சிகிச்சைக்காக வந்தாங்களே அது நாங்க செட்அப் பண்ணின ஆள்... பூபால் கூட வந்தவர் அவனோட அப்பாவே இல்லை... அவருக்கு சாதாரண அல்சர்தான் ஒழுங்கான உணவு முறை, எடுத்துட்டாலே சரியா போய்டும்ன்னு டாக்டர் சொல்லி அதுக்கு அவர் சிகிச்சை எடுத்துட்டு இருக்கார்....”

“என்ன சொல்றீங்க நீங்க.... எதுக்காக பூபாலை என்கிட்டே அப்போ அனுப்புனீங்க....”

“சதீஷ்ன்னு ஒரு பையன் உங்கக்கிட்ட வந்தானே நியாபகம் இருக்கா... அவனுக்கு என்ன பிரச்சனை....”

“அது அவனோட ஒரு கிட்னில கல்லு இருந்தது... பிளஸ் அதைத் தவிரவும் நிறைய பிரச்சனைகள்... அதனால அறுவை சிகிச்சை செய்து அவனோட ஒரு கிட்னியை எடுத்துட்டோம்....”

“பொய் சொல்றீங்களே டாக்டர்... அந்த பையனுக்கு ஒண்ணுமே இல்லை... காலேஜ் கான்டீன் சாப்பாடு ஒத்துக்காம வயுத்துல புண்ணு வந்திருக்கு... அதை நீங்க கிட்னி பிரச்சனையா மாத்தி உறுப்பையே எடுத்துட்டீங்க... அதை எடுத்து யாருக்கு பொருத்தி இருக்கீங்கன்னு வரை எங்ககிட்ட ரெகார்ட் இருக்கு பார்க்கறீங்களா...”

“இல்லை இல்லை.... நிஜமாவே அந்த பையனுக்கு கிட்னி பிரச்சனைதான்.... நாங்க அதைதான் சரி செய்தோம்...”

“நீங்க அறுவை சிகிச்சை முடிச்ச கொஞ்ச நாள்லயே அவனுக்கு மறுபடி வயுத்து வலி வந்திருக்கு... அதுக்காக அவன் டாக்டர் பார்க்க போய் இருக்கான்.... அவர்தான் அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லி, தப்பான சிகிச்சை செய்திருக்கறதா சொல்லி இருக்காரு....”

“அந்த டாக்டர் சரியா டெஸ்ட் பண்ணலையா இருக்கும்... டேமேஜ் ஆன கிட்னிதான் நாங்க எடுத்தாச்சே... அப்பறம் அவருக்கு எப்படி தெரியும் அந்த கிட்னி எப்படி இருந்ததுன்னு....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.