(Reading time: 11 - 21 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“டாக்டர் உங்களுக்கு நிஜமாவே புரியலையா... இல்லை என்கிட்டே போட்டு வாங்கறீங்களான்னு தெரியலை... இருந்தாலும் இதோ சதீஷோட மெடிக்கல் ரிப்போர்ட்... இது உண்மையான ரிப்போர்ட்... அவனோட கிட்னி எந்த பழுதும் இல்லாம நூறு சதவிகிதம் வேலை செய்யுதுன்னு நீங்க கொடுத்த ரிப்போர்ட்...உங்க கண்ணை வச்சு நல்லா பாருங்க... கீழ இருக்கறது உங்க கையெழுத்துதானே...”,சந்தோஷ் கேட்க அதற்கு மேல் பொய் கூற முடியாமல் தலை குனிந்தார்கள் மூவரும்...

அடுத்து சந்தோஷும் சந்தியாவும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்க மூவரும் தாங்கள் செய்த அனைத்தையும் ஒத்துக்கொண்டார்கள்....

“ரொம்ப நன்றி மாப்பிஸ்... எல்லா உண்மையும் ஒத்துக்கிட்டதுக்கு...”

“நாங்கதான் எல்லாத்தையும் சொல்லிட்டோமே... எங்களையும், எங்க குடும்பத்தையும் விட்டுடுங்களேன்...”

“எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..... விரல் சூப்புற குழந்தைங்கன்னா.... இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருங்க... அப்பறம் சகல மரியாதைகளோட வந்து கூட்டிட்டு போறோம்... இப்போ நாங்க வர்ட்டா....”, சந்தியா அவர்களுக்கு ஸல்யூட் வைக்க, சந்தோஷ் அடியாட்களிடம் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள கூற, பின் இருவரும் கிளம்பினார்கள்.... சக்தியும் அவர்களுடன் வந்து இணைந்து கொண்டான்...

“சக்தி எல்லாம் சரியா வந்திருக்கா... நீங்க காலேஜ் போன மேட்டர் என்னடா ஆச்சு...”

“சந்தோஷ் நீ நேர வண்டியை மாமா வீட்டுக்கு விடு... அங்க போய் பேசிக்கலாம்...”,சக்தி சொல்ல, சந்தோஷ் அவன் காரை சந்தியாவின் இல்லம் நோக்கித் திருப்பினான்...

அதிகாலை மூன்று மணியளவில் மூவரும் சந்தியாவின் வீடு வந்து சேர்ந்தனர்....

கதவைத் திறந்த சந்தியாவின் அன்னை மூவரையும் முறைத்தபடியே உள்ளே அழைத்தார்....

“என்ன அத்தை இது... சந்து பொந்துதான் எனக்கு முறை பொண்ணு அது முறைச்சா பரவாயில்லை... நீங்க ஏன் முறைக்கறீங்க...”, சக்தி கேட்க இப்பொழுது அவனை சந்தோஷ் முறைத்தான்...

“உங்க மூணு பேருக்கும் நேரம் காலமே இல்லையா.... அர்த்த ராத்திரி பிசாசு மாதிரி வீட்டுக்கு வர்றீங்க.... காலைல போனவங்க... எதுனாச்சும் சாப்பிடீங்களா இல்லையா...”

“எம்மாவ் தாயே அன்னபூரணி.... பயங்கரமா பசிக்குது... இருந்த வேலைல ஒரு டீ கூட அடிக்கலை... தயவு செய்து எதையாவது எங்க வயத்துக்குள்ள போட கொடு...”

“fridge தொறந்தா தோச மாவு இருக்கு... ஆளுக்கு ஒரு டம்ளர் குடிங்க....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.