(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்

Friends,
மிக மிக அவசரமாக ஏகப்பட்ட வேலைகளின் நடுவில் அடித்த அப்டேட்.... எழுத்து பிழையோ, சொற் பிழையோ இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்...

ந்தியா கூறியதைத் தொடர்ந்து சக்தியும், சந்தோஷும் தொலைக்காட்சியை பார்த்து அதிர்ந்தார்கள்....

அதில் அந்த வெளிநாட்டவர் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி பாதையோரத்தில் இருந்த கம்பத்தில் மோதி இருந்தது... அவர் அமர்ந்திருந்த பக்கமாக இடித்ததால் ஜன்னல் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துகள்கள் அவர் முகத்திலும், கை, உடலின் மேற்பகுதி என அனைத்து இடங்களிலும் கிழித்து விட்டது... இதில் அவர் இருக்கை பட்டி வேறு அணியாது அமர்ந்திருந்ததால்... காரிலிருந்த டாஷ் போர்டில் நெற்றி இடித்து அங்கிருந்து வேறு ரத்தம் வழிய ஆரம்பித்து இருந்தது.... இவை அனைத்தும் அங்கிருந்த CCTV காமெராவில் பதிவாகி இருக்க அதை மிகத் தெளிவாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்...

“என்னடா இது குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதையா போச்சு... இவன் வெளிநாடு போகாம எப்படி தடுக்கன்னுதானே மதி சார் அப்படி யோசிச்சுட்டு இருந்தாரு... இப்போ அவருக்கு வேலையே இல்லாம போச்சு போலயே....”

“ஹ்ம்ம் இந்த விபத்து காலைல அஞ்சு மணிக்கு நடந்து இருக்கு இல்லை.... இரு மதி சார்க்கு போன் பண்ணி இப்போ எப்படி இருக்காங்கன்னு கேக்கலாம்....”,சக்தி கூறியபடியே மதியை தொடர்பு கொண்டான்....

“என்ன அதுக்குள்ள மூணு பேரும் எழுந்துட்டீங்களா... நீங்க போன நேரத்தை பார்த்து மதியம் போலதான் எழும்புவீங்கன்னுதான் நான்  போன் பண்ணல....”

“சார் அப்படி தூங்கி இருந்தோம் இப்படி சுட சுட ஒரு நியூஸ் மிஸ் பண்ணி இருப்போம்... உங்களுக்கு வேலையே வைக்காம தானாவே ஊருக்கு போகாம இருந்துட்டான் போல வெளிநாட்டு மாப்பிள்ளை...”

“அடப்போ சக்தி.... டாக்டர் மாப்பிள்ளைகளை தூக்கினதை விட இவனை தூக்கத்தான் அதிகம் யோசிச்சு பிளான் பண்ண வேண்டியதா போச்சு...”

“என்ன சார் சொல்றீங்க... இது உங்க வேலையா....”

“ஆமாம் சக்தி.... ஹோட்டல் அமர்த்தின  டிரைவரை தூக்கிட்டு அங்க நம்ம ஆளை மாத்தி யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஆக்ஸிடென்ட் பண்ணியாச்சு.... அப்படியே அவனை நமக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்கற எடத்துல அட்மிட்டும்  பண்ணியாச்சு.... இனி அடுத்த வேட்டைக்கு நிம்மதியா கிளம்பலாம்.....”

“சார் இந்த செய்தியை நம்ம மெயின் குற்றவாளியும் பார்த்திருப்பானே... அவன் வந்து அவனோட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னா ஆபத்தா போய்டுமே... அங்க போனா அவனோட டாக்டர்ஸ் வேற இல்லைன்னு கண்டுபுடிச்சுடுவானே.....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.