(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“சார் இதுல பெரிய பிரச்சனை தாளாளரை கைது பண்ணிட்டு இவைகளை வெளிய விட்டு வச்சாலும் கஷ்டம்தானே... அவங்க வழியா மத்தவங்க உஷார் ஆகலாம்... இல்லை வெளிய இருக்கற இவங்க ஆதாரத்தை அழிச்சுடலாம்....”

“நீ சொல்றதும் சரிதான்.... சரி சக்தி நீ இங்க வரும்போது என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுக்கலாம்... சந்தியா, சந்தோஷ் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் போல காலேஜ் போங்க.... எந்த மாற்றமும் வேண்டாம்... நாங்க பேசிட்டு அடுத்து என்னன்னு உங்களுக்கு மெசேஜ் அனுப்பறோம்.... பத்து மணிக்கு பார்க்கலாம் சக்தி...”, என்றபடியே மதி தொடர்பை துண்டிக்க சக்தியும், சந்தோஷும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள்....

சக்தி வீடு திரும்ப காயத்ரி சரியாக கல்லூரிக்கு செல்ல கிளம்பி மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்....

‘என்னடா இது.... எட்டு மணி காலேஜுக்கு நம்மாளு ஏழு மணிக்கே போய் அட்டெண்டன்ஸ் கொடுப்பா.... இன்னைக்கு மணி ஒன்பது ஆகுது.... இப்போதான் கிளம்பறா... காயு பேபிக்கு உடம்பு சரியில்லையா...’,மனதில் பேசிக்கொண்டு  காயுவை சைட் அடித்தபடியே வந்து ஹாலில் அமர்ந்தான் சக்தி.... அவனை பார்த்தவுடன் இங்கு காயத்ரிக்குதான் கை, கால் எல்லாம் பரத நாட்டியம் ஆட ஆரம்பித்தது.... தடுமாறியபடியே படியில் கீழிறங்கினாள்....

‘பார்றா நாம கூட பார்க்க டெர்ரர் பீஸாத்தான் இருக்கோம் போல... காயு பேபி இப்படி பயப்படுது....’, மறுபடியும் சக்தியில் மைன்ட் வாய்ஸ்....

‘பார்வை ஒன்றே போதுமே... பல்லாயிரம் சொல் வேண்டுமா....”, பாடியபடியே வந்தமர்ந்தார் சக்தியின் அன்னை....

“எம்மாவ் இதைவிட அரத பழசான பாட்டே உனக்கு கிடைக்கலையா... ஆமா இப்போ எதுக்கு இந்த பாட்டு....”

“சிச்சுவேஷன் சாங்டா மகனே.... நீ அவளைப் நோக்க, அவ தரையைப் நோக்கன்னு ஒரே நோக்கியாவா இருந்தீங்களா... சரி ட்ரீம் சாங் போடுவோமேன்னு போட்டேன்... ஆனாலும் மகனே உன் முகத்தை பார்க்கறதை விட தரையே நல்லா பளபளான்னு இருக்குன்னு காயத்ரி அதை உத்து உத்து பார்க்கறா பாரு.... அறிவாளின்னு நிரூபிச்சுட்டாடா....”

சக்தியின் அன்னை பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் அருகில் அமைச்சர் வந்து அமர்ந்தார்....

“என்னடா....”, மனைவி பண்ணும் அடாவடித்தனத்தை பார்த்து சிரித்தபடியே கேட்டார் அமைச்சர்....

“உங்க பொண்டாட்டி என்னை கலாய்ச்சுட்டாங்களாமாம்... இவங்க பண்ற மொக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.