(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“அதெல்லாம் தெளிவா யோசிச்சு பக்காவா ஏற்பாடு பண்ணியாச்சு சக்தி.... இடுப்பு வரை செம்ம அடின்னு சொல்லி ரெண்டு நாள் அவனை படுக்கையை விட்டு அசைக்கறது நல்லதில்லை... அதன் பிறகு ஷிப்ட் பண்ணிக்கலாம்ன்னு டாக்டரை விட்டு சொல்ல சொல்லிட்டேன்... அதே மாதிரி அவனை யார் பார்க்க வந்தாலும் எந்த கெடுபிடியும் பண்ணாம அனுமதி அளிக்க சொல்லி இருக்கேன்.... ஸோ பார்ப்போம் இந்த ரெண்டு நாள்ல எத்தனை பேர் வந்து பார்த்து நம்மக்கிட்ட மாட்டறாங்கன்னு.... இதுக்கு நடுவுல  நம்ம மத்தவங்க அத்தனை பேரையும் உள்ள தள்ளியாகணும்....”

“புரியுது சார்...  ஆனா ரெண்டு நாள்ல அது சாத்தியமா சார்... சந்தோஷ் எடுத்துட்டு வந்த டாகுமென்ட்ஸ் பார்த்தா காஷ்மீர்ல  ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை இவங்க நெட்வொர்க் இருக்கு... அதே மாதிரி இந்தியா மட்டும் இல்லாம பல வெளிநாடுகளும் இந்த நெட்வொர்க்ல இருக்கு... இதுல ஏதானும் ஒரு இடத்துல நியூஸ் கசிஞ்சாலும் அத்தனை பேரும் உஷார் ஆகிடுவாங்களே....”

“நம்ம நாட்டுல லஞ்சம், ஊழல் இதுல கொழுத்தவங்க 62 சதவிகிதம் இருக்காங்களாம்.... புள்ளி விவரம் சொல்லுது... இந்த மாதிரி அயோக்கியனுங்க அவங்களை கரெக்டா டார்கெட் பண்ணி தங்களோட  காரியத்தை சாதிச்சுக்கறாங்க... ஆனால் அத்தனை சதவிகிதம் கெட்டவங்க இருந்தாலும் நம்ம நாடு இன்னும் முன்னேறி கொண்டிருக்க காரணம் அந்த 38 சதவிகிதம் பேர்தான்..... எங்க குரூப் ஒரு ஒரு இடத்திலும் ஆளை செட் பண்ணி இருக்கறது அந்த 38 சதவிகிதத்தில் இருந்துதான்... எப்படி சந்தோஷ் உயிரே போனாலும் எதையும் வெளிய சொல்லாம, யாரையும் காட்டி கொடுக்காம இருப்பானோ அப்படித்தான் மத்தவங்களும்.... ஸோ கவலையேப் படாத... நாளை இரவுக்குள்ள  ஒட்டுமொத்தமா அத்தனை பேருக்கும் தீபாவளி கொண்டாடிலாம்....”

“சரி சார்... இன்னைக்கு எங்களுக்கு என்ன வேலை...”

“சக்தி... சாரங்கனும், பாரதியும் பத்து மணிக்கு என் வீட்டுக்கு வர்றாங்க...  உன்னோட ரெகார்டிங் எல்லாம் எடுத்துட்டு நீயும் வந்துடு.... டாகுமென்ட்ஸ், வீடியோஸ் எல்லாம் அவங்களும் பார்த்துட்டு அடுத்த மூவ் பண்ணலாம்....”

“சார் அந்த ஒரிஜினல் மெடிக்கல் ரிப்போர்ட் வந்துடுச்சா....”

“இன்னைக்கு ஒரு பதினோரு மணி போல கிடைச்சுடும்... அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு....”

“சார் இதுவரை உள்ள எவிடென்ஸ் போதுமே... நேரடியா நீங்க அவங்களை கைது பண்ணிடலாமே....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.