(Reading time: 10 - 20 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 17 - சாகம்பரி குமார்

டாக்டர். சுந்தரம்…  பொது மருத்துவர். ஒரு தனியார் மருத்துவமனையில் உதவி மருத்துவராக இருந்தான். அன்றைய ட்யூட்டியை முடித்து வெளியே வந்தவன் , வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து தன்னுடைய புல்லட் வண்டியை எடுத்தான்.

"ஹாய்" என்ற குரல் கேட்டு திரும்பியவன்..

"அடக்ருபா!. நீ எப்போ ஜெர்மனியிலிருந்து வந்தாய்? "

"நேத்துதான் வந்தேன். நீ எப்படி இருக்கேப்பா?"

"ரொம்ப நல்லா இருக்கேன். "

"நைஸ்அப்படினா கெட்டி மேளம் கொட்டிட வேண்டியதுதான்."

"நல்லா இருக்கேன்னு சொன்னா பொறுக்காதே. உடனேயே கெடுத்துடணுமா?"

"சத்ரு மித்ரன்னா அப்படித்தான். கல்யாணம் செய்துட்டு நீ கதறத பார்க்கணும்"

"அந்த ஆசை எனக்கு வராதா என்ன?"

"நான்தான் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்படறேனே. " சொல்லிக் கொண்டிருந்த க்ருபா அப்போது அவனை கடந்து  சென்ற இளம் பெணணை பார்த்து சிரித்தான்.

"இவிட நோக்கணும் பாஸ்எதுக்கு அந்த பொண்ணை பார்த்து சிரிச்சே"

"அது…  என்னை பார்த்து சிரிச்சாள். க்யூட் கேர்ள்"

"அதெப்படி உன்னை பார்த்து சிரிச்சா?. அது யார் தெரியுமா? அலிஷா.. அனிஸ்திடிஸ்ட்.."

"யூ மீன்.. மயக்க மருந்து டாக்டர்…  அதுதான் தலை சுத்துதா?"

"எனக்கும்தான்.. நீ செஞ்ச வேலைக்கு நாளைக்கு சீஃப் டாக்டர் கிட்டே  நான்தான்   திட்டு வாங்கப் போறேன்."

"ஏன்"

"அலிஷாவை பார்த்து நீ சிரிச்சேன்னு சொல்லாமல் நான் சிரித்து வைத்தேன்னு சொல்லுவாள்"

"அதுக்கு அவர் ஏன் கோபப்படனும்?"

"அலிஷா அவரோட பொண்ணுஅவள் ரொம்ப அட்டிட்யுட். பாய்ஸ் எல்லோரையும் மாட்டி விட்ருவா. அவளை பார்த்தாலே ஓடிடுவோம்."

"நம்மகிட்ட அது செல்லாது. திரும்பி வருவாள் பாரேன்"

சுந்தரம் நம்பாத பார்வை பார்த்தான். அவளாவது வர்றதாவது..? ஆனால்

அவர்களை கடந்து சென்றிருந்த அலிஷா டக்கென்று திரும்பி வந்தாள். யாரையோ தேடுவது போல அவர்களை கடந்தாள். கண் இமைக்கும் நொடி க்ருபாவை பார்த்து சிரித்து நகர்ந்தாள். சுந்தரம் அதிர்ந்தான். இங்கே என்ன நடக்குது…!

"ஐயாவோட சார்மிங் அப்படிப்பா.. ஒரு செகண்டாவது திரும்ப வச்சுடுவோம்ல"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.