(Reading time: 10 - 20 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவநம்பிக்கை.. சுயநலம்.. என்ற மிருககுணங்கள் வந்து விட்டால்உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு கங்குகளுக்கு விசிறி விட்டது போல எப்போது வேண்டுமானாலும் அழிவை உருவாக்கி விடும்.

இத்தனைக்கும் காரணமான மனம் ஒரு ஞானியைப்போல சில சமயங்களை கடந்தாலும் ஆட்டுவிக்கப்படும் குரங்குபோலவும் கிறுக்கு பிடித்து வைக்கும்.

துளசி.. சுந்தரம்.. க்ருபா.. அஞ்சலை.. இவர்களில் யார் என்னவாகப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

சுயநலத்தின் வெளிப்படாக 

எதிர்பார்த்து ஏமாற்றமுடன்

சீறலும் சினமுமாக 'அது...'

சில சமயம் காயங்களுடனும்,

சில சமயம் வலிகளுடனும்...

ஏதோ செய்து அடக்கிவிட்டு

கொல்லைப்புற இருளில் 

கொட்டிலில் கட்டினாலும்

அன்பின் நித்தியத்தையும்

சத்தியத்தையும் ஓதினாலும்..

கேட்கும் சக்தி இருந்தபோது

பின்வரும் நாளை எண்ணி

பணிந்து பழகி மௌனித்தது!

கூரிய நகங்களை தீட்டாமல்

அடிபட்ட காயங்களை கிளறி 

வலியின் வலிமையை தூண்டாமல் 

அமைதியாகவே இருந்தது!

மோசமான ஒரு நொடியில்

கொட்டிலை விட்டு சென்று

சிவப்பு சிதிலங்களுடன்

 தன் நம்பிக்கை சிதைத்து 

மீண்டும் திரும்பியது......

கட்டவிழ்ந்து போகும் முன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.