(Reading time: 10 - 20 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

துளசியின் வீட்டில் சுந்தரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாகியபோது..  விசாக்காவின் முடிவினை நினைத்து பயந்து போன துளசி வீட்டை விட்டு ஒரு நள்ளிரவில் வெளியேறினாள்.

வீட்டைவிட்டு வெளியேறிய துளசி சுந்தரத்தை திருமணம் செய்தபின்தான் க்ருபாவிற்கும் கற்பகத்திற்கும் விவரம் தெரிந்தது. பொள்ளாச்சியில் வீடு எடுத்து தங்கியிருந்தவர்களை பார்க்க சென்றான்.

"சுந்தரம்.. ஏன் இப்படி செஞ்சே.. திருட்டுத்தனமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?. நான்தான் துளசி வீட்டிலும் உன்னுடைய வீட்டிலும் பேசுவதாக சொன்னேனே"

"அது.. துளசி வீட்டில் விஷயம் தெரிந்து விட்டது. அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் அவசரமாக.."

"அது சரி.. உங்க வீட்டில் அனுமதி வாங்கி இருக்கலாமே?"

"துளசி வீட்டில் சம்மதித்தால் மட்டுமே அப்பாவும் சம்மதிப்பதாக சொன்னார். இனிமேல அவரும் ஒத்துக்க மாட்டார்."

சுந்தரமும் துளசியும் செய்தது முட்டாள்தனமான காரியமாக க்ருபாவிற்கு தோன்றியது. பெற்றவர்களின் சம்மதத்தை எப்பாடு பட்டாவது வாங்கி இருக்க வேண்டுமல்லவா?

காதல் உயர்வானதுதான்.. ஆனால் அதற்காக இப்படி செய்யலாமா? இருவர் மட்டுமே வாழும் வாழ்க்கை அல்ல.. எதிர்காலத்தில் குழந்தைகள் வரலாம் அவர்கள் தனித்து இருக்கலாமா.. அனைத்து உறவுகளும் அவர்களுக்கும் வேண்டும் அல்லவா?

இப்படி அவர்களை கடிந்து கொண்டான். அவர்கள் இந்த நிலைக்கு வந்ததற்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து நடந்த தவறை சரி செய்ய முயற்சித்தான்.

இருவருடைய வீட்டிற்கும் சென்று சமாதானம் பேசினான். கடுமையான முயற்சிக்கு பின் சுந்தரத்தின் அப்பா அவர்களை ஏற்றுக் கொண்டார். இருவரையும் தாதிபட்டிக்கு வரவழைத்துக் கொண்டார்.அவருடையது  தாதிப்பட்டியில் செல்வாக்கான குடும்பம்.

.துளசி பொறுப்பான அமைதியான பெண் என்பதால் சுந்தரத்தின் வீட்டில் பிரியமாக  ஏற்றுக் கொண்டனர்வாழ்க்கை அமைதியாக செல்ல ஆரம்பித்தது.

இத்தனை க்கும் காரணம் க்ருபாவின் முயற்சிகள்தான்… அதற்கு காரணம் அவன் செய்த முட்டாள்தனம்தான். ஆனால் மற்றவர்கள் மனதில் அவனுடைய செயல்கள் சந்தேகத்தை விதைத்தன. அது பல கேள்விகளை எழுப்பி வைத்தது

இவன் எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும்… சுந்தரத்திற்காக செய்யலாம். ஆனால் துளசியிடமும் ஆர்வம் காட்டுகிறானோ? என்ற கேள்விகள் எழசுந்தரம் அவற்றை மறுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.