(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

பெர்போர்மன்சை நீங்கதான் மெச்சிக்கணும்... சரி இப்போ எதுக்கு என் காயு பேபியை பார்க்க விடாம ரெண்டு பேரும் இங்க வந்து உக்கார்ந்திருக்கீங்க...”

“இப்போ சொன்ன பார்த்தியா.... ரொம்ப சரி மகனே.... பேபியை கல்யாணம் பண்ணினா இப்படித்தாண்டா... கூடவே மம்மி, டாடி எல்லாம் வருவாங்க...”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே இறங்கி வந்த காயத்ரி சக்தியின் அன்னையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்....

“காயு சந்தியா நேத்து கடைக்கு போனாளாம்... அங்க அவ வாட்ச் வாங்கும்போது உனக்கும் சேர்த்து வாங்கினாளாம்... இதை உங்கிட்ட கொடுக்க சொன்னா...”

“மகனே இது நிஜமாவே சந்தியா வாங்கினதாடா...”, சக்தியின் அருகில் நெருங்கி அவனின் காதை கடித்தார் அவன் அன்னை.... காயத்ரியும் அந்த சந்தேகத்துடனே சக்தியை பார்த்தாள்...

“என்ன காயு சந்தேகமா பார்க்கற.... இது நிஜமாவே சந்தியா வாங்கினதுதான்... யாருமேல சத்தியம் பண்ணட்டும்... எங்கம்மா மேல பண்ணட்டுமா...”, சக்தி கையை தூக்கி அவன் அன்னையின் தலையில் அடிக்க போக அவர் அப்படியே தாவி குதித்து அருகிலிருந்த  அறையின் வாசலுக்கு சென்றார்.... அடுத்து கையை தன் தந்தையின் அருகில் நீட்ட, “டேய் வேணாண்டா சக்தி.... எனக்கு இருக்கறது ஒரே ஒரு புருஷன்தான்... அவரையும் சத்தியம் பண்றேன்னு சாச்சுப்புடாத....”, சக்தியின் அன்னை சொல்ல, காயத்ரி இவர்களின் விளையாட்டை பார்த்தபடியே அவனிடமிருந்து வாட்ச்சை வாங்கிக்கொண்டாள்.... அவள் வாங்குவதை பார்த்த பின்பே சக்தியின் அன்னை ஆசுவாசமடைந்து அவன் அருகில் வந்து அமர்ந்தார்... வாட்ச்சை காயத்ரி தன் பையினுள் வைக்க போக,

“காயத்ரி... இதை நீ எப்பவுமே உன் கையில கட்டி இருக்கனுமாம்.... கழட்டவே கூடாதுன்னு சந்தியா சொல்ல சொன்னா....”, சக்தி சொல்ல, காயத்ரி அதை தன் கையில் அணிந்துகொண்டு அனைவரிடமும் விடை பெற்று கல்லூரிக்கு கிளம்பினாள்.... இவன் அவள் அணிந்து கொள்ள எதற்கு இத்தனை கட்டாயப்படுத்துகிறான் என்று பார்த்தார்கள் சக்தியின் பெற்றோர்....

சக்தி தன் பெற்றோரை அவன் அறைக்கு அழைத்து சென்று அன்று வரை நடந்தது அனைத்தையும் கூறினான்....

“திருட்டு பசங்க... இவங்களை எல்லாம் சும்மா விடவே கூடாது... அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்கணும்....”

“சக்தி சந்தியா உறுதியா அந்த மூணு பேரைத்தான் சொன்னாளா....”

“ஆமாம்ப்பா மதி சார் கூட அவக்கிட்ட சந்தேகம் வந்து ரெண்டு, மூணு முறை கேட்டாரு.... ஆனா அவ உறுதியா இவங்க மூணு பேரைத்தான் சொன்னா... ஆனா அவங்களை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.