தொடர்கதை - காரிகை - 12 - அமுதினி
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உளியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ தான் உணர வைத்தாய்
அந்த நோட்டீஸில் கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் இருந்தது. அப்படி இப்படி புரட்டி பார்த்தாலும் பவித்ராவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அருகே அமைதியாக நின்று கொண்டிருந்த சத்யாவின் புறம் சென்றது பவித்ராவின் கண்கள். ஆனாலும் அவனிடம் அவளாக சென்று கேட்க அவளுக்கு மனம் வரவில்லை. அவளின் கலக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.
"அக்கா,நான் ஒரு நல்ல வக்கீலா பார்த்து இந்த நோட்டீஸ் பத்தி விசாரிச்சிட்டு மேல என்ன பண்ணலாம்னு சொல்றேன். ஒண்ணும் பயப்பட வேண்டாம்" என்றாள் ஆஸ்ரம மேற்பார்வை பார்க்கும் பெண்மணியிடம். அங்கே இருப்பவர்களிடமும் தைரியம் தரும் வண்ணம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினாள்.
காரில் அவள் ஏறி அமர்ந்ததும் வண்டியை கிளப்பியவன் கண்ணாடி வழியே தெரிந்த அவளின் முகத்தை பார்த்தான். புருவங்கள் நெரித்திருக்க கையில் இருந்த அந்த நோட்டீசை புரட்டி கொண்டிருந்தாள்.
"இந்த நோட்டீசை அனுப்புன கமலக்கண்ணன் யாருன்னு தெரியுமா உனக்கு?" அமைதியை துறந்து அவனே அவளிடம் கேட்டான்.
அவனின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எதுவும் கவனிக்காதது போல நின்றிருந்தவனுக்கு அதை அனுப்பியவன் பெயரெல்லாம் தெரிந்திருக்கிறதே என. அவன் தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள் இல்லை என தலை அசைத்தாள், அவன் கண்ணாடி வழியே தன்னை பார்ப்பதை உணர்ந்து.
"ஹ்ம்ம்... முதல்ல அந்த கமலக்கண்ணன் யாருனு விசாரி. அவரை நேருல பார்க்க முடியுமான்னு ட்ரை பண்ணி பாரு. அவரு எதுக்காக இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்புனாருனு கேளு. அவரு நோட்டீஸ் படி இது அவங்க தாத்தா சொத்து. அவருக்கு தான் சேரனும். அவருடைய அனுமதி இல்லாமல் இங்க இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டிருக்குனு இருக்கு. இந்த