(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 18 - சாகம்பரி குமார்

து ஒரு ஏப்ரல் மாத கடைசி நாள்… மறுநாள் மே மாதத்தின் முதல் நாள்….

அதுதான் துளசி சுந்தரம் குடும்பத்தின் கடைசி நாளாக இருக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

துளசி இரவு உறங்கப் போகும் முன் மாத காலண்டரை எடுத்து மே மாதத்திற்கான பக்கத்தை திருப்பி மாட்டினாள்

"குட்டிஸுக்கு லீவு ஆரம்பித்து ஒரு வாரம் ஆயிடுச்சு. மே மாசமும் வந்துடுச்சு. அபிக்கு பிறந்த நாள் வரப்போகுது."

"எனக்கு தெரியும்மா.. ஐந்தாம் தேதி அபி செல்லம் பர்த் டே. கேக் ஆர்டர் தரணும். "

"அப்பாஎனக்கு மிக்கி மவுஸ் கேக்தான் வேணும்."

"அது எலியாச்சேம்மா.. அதோட கேக் உனக்கு எதுக்கு?"

"ஹாங்.. போங்கப்பா.. மிக்கி மவுஸ் படம் போட்ட கேக் வேணும்னு சொன்னேன்"

" ஏய் நான் கேக் செஞ்சு தரேண். வெளியில ஆர்டர் பண்ண வேணாம்" துளசி சொல்ல,

"ஆஹாங்.. நீ கேக் செய்யப் போறியா. இது கேக் அப்படினு போர்ட் வைச்சிருமாஇல்லேன்னா அது வட்டிலப்பம்னு தப்பா நினைச்சுடுவோம்."

"அம்மா வட்டிலப்பம் செஞ்சு கலர் பொடி போட்டுஜாம் தடவி கேக்குன்னு சொல்லுவாங்க." அபியும் அதிதியும் க்ளுக்கி சிரித்தார்கள்.

"என்னை கேலி செய்றீங்களா? உங்களை…" துளசி கை ஓங்கினாள்.

"சரி சரி விடு துளசி. குட்டிம்மாக்கு மிக்கி மவுஸ் கேக் சொல்லிடலாம் நாளைக்கு டவுனுக்கு போய் ஆர்டர் செஞ்சிடறேன்."

"நாங்களும் வரோம்நாங்களும் வரோம்"

"சரி.. போகலாம்."

"நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க. எனக்கு வேலை இருக்கு" துளசி சொன்னாள்.

அபிதாவின் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று திட்டமிட்டனர். மறுநாள் காலையில் டவுனுக்கு மூவரும் செல்ல முடிவெடுத்து உறங்க சென்றனர். அதுதான் அவர்கள் ஒன்றாக இருந்த கடைசி இரவு.

அந்த குடும்பத்தை உருக்குலைத்த கறுப்பு நாளாக மறுநாள் விடியப் போகிறது என்பது யாருக்கும் அப்போது தெரியவில்லை. அந்த பேரழிவிற்கு காரணமாக இருந்த கன்னியம்மாவிற்குகூட அது தெரியவில்லை

யார் இந்த கன்னியம்மா… துளசியின்  சித்தி..!  இரண்டு நாட்களுக்கு முன்பே ஊட்டியிலிருந்து அஞ்சலையை பார்க்க வந்திருந்தாள். கணவனுடன்  தனி வீடெடுத்து தங்கி இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.