(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"எதுக்கு அலையறீங்கஅவர் வந்துடுவார். நீங்க வெயிட் பண்ணுங்க. நான் சித்தி வீடுவரை போயிட்டு வரேன்." அவனிடம் ஒரு  நாளிதழை நீட்டினாள்.

அவன் அமரவும்…. அவனுக்கு முன் இருந்த டீபாயில் ஒரு தட்டில் 'லட்டும்' காரசேவும் வைத்தாள்.

"காபி போட்டு வரேன்" என்று அவள் உள்ளே செல்ல…. க்ருபா நாளிதழை புரட்டியபடி லட்டை உடைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

அதுவரை சரியாக இருந்த சூழல் மாற ஆரம்பித்தது.

கையில் காபி கோப்பையுடன் வந்த துளசி தடுமாறினாள். மயங்கி விழுந்தாள்

"துளசி என்னம்மா?" பதட்டதுடன் எழுந்த க்ருபா தரையில் மயங்கி கிடந்த துளசியின் முகத்தில் தண்ணீர் தெளித்தான். சற்று தெளிந்த அவள் எழுந்து அமர்ந்தாள்.

"என்னாச்சுநான்போய் சுந்தரத்தை கூட்டிட்டு வரேன். கார்லதான் வந்தேன்."

அவள் தெளிவில்லாத பார்வை பார்த்தாள். கையை ஊன்றி எழ முயற்சி செய்தாள். தடுமாறி விழுந்தாள்.

"ஆர் யூ ஆல் ரைட்?"  க்ருபா அவளுக்கு அருகில் சென்று குனிந்தான். குனிந்த நொடியில் அவனுக்கும் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. தரையில் தடக்கென்று விழுந்தான்.

மீண்டும் சுதாரித்து எழுந்தபோது…

'வாட்முன்னி இங்கே என்ன செய்கிறாள். தரையில் ஏன் விழுந்து கிடக்கிறாள்?'  குழப்பத்துடன் பார்த்தான்….

"முன்னி.." என்று அழைத்தபடி அருகில் அமர்ந்தான். அவள் தலையில் கை வைத்து தடவினான்.

அவனை நிமிர்ந்து பார்த்த 'முன்னி' கண்களில் கண்ணீர்அவன் கலங்கி போனான். அவனுடைய உலகம்…  உயிர் அத்தனையும் முன்னிதான்அவளுக்காக உயிரையும் தருவான்அவனுக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லைதங்கையின் குடும்பம் தான் அவனுடையது

வருத்தமான விஷயம் என்னவெனில் அவனுடன் முன்னி சரியாக வர பேசுவதில்லை.. அதிலும் அவன் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்ன பின்பு சுந்தரத்தைதான் 'அண்ணா' என்று அழைத்தாள். க்ருபா என்றைக்கு திருமணம் செய்து கொள்வானோ அன்றுதான் அவனுடன் பேசுவதாக  பிடிவாதம் பிடித்தாள். அவன் கண்முன்கூட வருவதில்லை. அவனுக்கும் முன்னிக்கும்தான்  ஆழமான பிரியம் இருந்தது. இப்போது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.