(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 10 - சகி

நீண்ட நேரமாக அந்த ஓவியத்தினையே கவனித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவனால் அதிலிருந்துத் தனது விழிகளை விடுவிக்கவே இயலவில்லை. இவ்வளவு அழகாக அவளால் எவ்வாறு தீட்ட இயன்றது என்ற வினா மட்டுமே அவனிடமிருந்தது. அது ஒரு இரவு நேரம், அலைக்கடலின் கரையோரம் தன்னில் புவியின் ஒரு பகுதியில் உதித்தெழுந்த வெண்ணிலவினை தன் அன்புக்குரிய தலைவியின் மடியினில் சாய்ந்துக் கொண்டு காதல் மொழிகள் புனைந்து இரசித்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவளது முகமோ நாணத்தால் சிவந்துப்போக, அவன் விழிகளோ மோகத்தினால் திளைத்துக் கொண்டிருந்தது. காண்பவர் மனதில் உணர்வுகளைக் கூட புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நேர்த்தி அவ்வோவியத்தில் இலயித்திருந்தது. மறைமுகமாக அவள் கூற வரும் கருப்பொருளும் அவனுக்கு விளங்காமல் இல்லை. தன்னை மறந்து ஓவியத்தில் மூழ்கியிருந்தவனின் கவனம் அவ்வறைக் கதவு திறக்கப்படும் ஓசையால் ஈர்க்கப்பட்டது. எதிர்நோக்காமல் உள்ளே நுழைந்தவள், எதிர்நோக்காதவனைக் கண்டதுமே ஒரு நொடி தடுமாறினாள்.

"ஆதி..?நீங்க இங்கே..?" அவளது திடீர் வருகையால் உறைந்துப் போனான் ஆதித்யா.

"ஆ..!அது...நான்...சும்மா இந்தப் பக்கம் வந்தேன். இந்தப் பெயிண்ட்டிங் சூப்பரா இருந்தது அதான்...அப்படியே...ஸாரி!" உண்மையில் அவன் வந்தது தனிமையில் சில பொழுதுகள் அவளோடு தனித்திருக்கவே..! அவளோ, அடுத்து என்ன கிளம்ப வேண்டியது தானே என்பதாய் நோக்கினாள்.

"இது ரொம்ப அழகா இருக்கு!" ஏனோ அவன்தம் பாராட்டு அவளைச் செயலிழக்கவே செய்தது.

"இது...இன்னும் முழுமையாக முடிக்கலை!" தன்னையே அறியாமல் அவனருகே வந்தாள் மாயா. அவளது கவனமும் ஓவியத்திலே இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னிலையில் கிட்டிய உரிமை கலந்த அந்த நெருக்கம், மீண்டும் கிட்டியதில் ஓர் ஆனந்தம் அவனுக்கு! ஏற்பட்ட நெருக்கமதில் இரு தோள்களும் இணைவதை நிச்சயம் மாயா உணரவில்லை.

"உனக்கு ஞாபகம் இருக்கா?சின்ன வயசுல, உன் பெயிண்ட்டிங் புக்கில் கலர் பண்றேன்னு கிறுக்கி வைப்பேன்!" அந்நிகழ்வுகள் இருவருக்குமே புன்னகையை பரிசளித்தன. மலரும் நினைவுகள் அவையனைத்தும்!

"சின்னப்பொண்ணா இருக்கும் போது இருந்த மாதிரி நீ இப்போ இல்லை!" என்றதும் குழம்பியது அவள் மனம்!

"ஏன்? ஏன் அப்படி சொல்றீங்க?" என்றாள் குழப்பமாக! அவ்வினாவிற்கு உடனடியாக விடை அளிக்காமல் மௌனமாக இருந்தவன், அவள் விழிகளை உற்று நோக்கினான். ஏதோ ஓர் தேடல் இருந்தது அவனிடத்தில்! அவனதுப் பார்வை தன்னுள் ஊடுருவ, அசையவும் மறந்துப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.