(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

போனது அவளுக்கு!

"எங்கே! என் கண்ணைப் பார்த்து இப்போ சொன்னதை சொல்லுப் பார்ப்போம்!" என்றதில் அவளது மொத்த கர்வமும் இடம்தெரியாமல் அடங்கிப் போனது. அனைத்து அழகாக சென்றத் தருணம் அது! தான் செய்த ஒற்றை பாவம் தன் வாழ்வையே புரட்டிப்போடும் என்று அவர் எதிர்நோக்கவில்லை.

"ராகவா!" தாயாரின் குரல் கேட்டவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"மா!சொல்லுங்கம்மா!" தாய்க்கா தெரியாது மகனின் பாரமதை! வாடிய முகத்திலே கண்டறிந்தார் அவர் மன எண்ணங்களை!

"உன்கிட்ட மறைக்கணும்னு சொல்லாம இல்லை...சொன்னா கஷ்டப்படுவியோன்னு நினைத்தேன். தர்மாவைப் போய் பார்த்துட்டு வந்தேன்டா!" என்ற கூற்றில் உறைந்துப் போனார் அவர். கண்கள் தன்னிச்சையாகப் பனிக்கத் தொடங்கின.

"எ..எப்படிம்மா இருக்கா?என்னைப் பற்றி எதாவது கேட்டாளா?" அவ்வளவு நடந்தப்பின்பும், இத்தனை வருடங்கள் கடந்தும் அக்காதல் உயிருடன் இருக்காதா என்ற ஓர் எண்ணம் அவருக்குள்!

"அவ உன்னை மறக்கலைடா! இன்னுமும் உன்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்." என்ற பதிலில் அத்தனை வேதனைகளையும் களைந்துப் பரிபூரண நிம்மதிக் கொண்டது அவர் மனம்!

"பசங்க இரண்டுப் பேரையும் பார்த்தேன். சின்னவனை அப்படியே உன்னை சின்ன வயசுல பார்க்கிற மாதிரி இருந்தது!" சட்டென உள்ளூர தோன்றிய அந்த உணர்வு அது குற்றவுணர்வாகவும் இருக்கலாம்!

"நீ போய் எல்லாத்தையும் சொல்லி அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டு, தர்மாவை கூட்டிட்டு வாயேன்டா!" மௌனங்கள் அங்கு காரணமே இன்றி குடிக்கொண்டன.

"எப்படிம்மா?என்னன்னு நான் சொல்லுவேன்? அவனுடைய அம்மாவை கொன்றவன்னு சொல்லணுமா? இத்தனை நாளா அவன் பார்க்கணும்னு ஆசைப்பட்ட அவனுடைய அப்பா நான்தான்னு சொல்லணுமா? அவன் கடந்தக்காலத்தை சொல்லணுமா? என்ன நான் சொல்லுவேன்! எனக்கு அவன் முகத்தைப் பார்க்கிற தைரியம் இல்லைம்மா! அன்னிக்கு நம்ம தோப்புல அவனைப் பார்த்தேன்...!அவன் என் மகன்னு தெரிந்தும் என்னால உரிமைக் கொண்டாட முடியலை! 25 வருடத்துக்கு முன்னாடி நான் செய்த பாவம், என் சொந்த இரத்தங்களையே என்கிட்ட இருந்து பிரித்து வைத்திருக்குன்னு சொல்லணுமா!" கண்ணீர்விட்டு கதறி அழுதவரை தேற்ற இயலாமல் தவித்தார் அவன் தாயார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.