(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

போயிருந்தாள் மாயா. பேச்சு எழ மறுத்தது.

"அன்னிக்கு உன் முகத்துல இந்த வெட்கத்தை நான் பார்த்தது இல்லை!" என்றதும் வெளிப்படையாக சிவந்துப் போயின இரு கன்னங்களும் அவளுக்கு! தன்னை எவ்வளவோ கட்டுப்படுத்த அவள் எண்ணியப் போதிலும் ஏனோ அவன் பார்வையை அவளால் தாங்க இயலவில்லை. நிலைத் தடுமாறியவள், அவளிடமிருந்து விலகி நின்றாள். மனதில் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புக வேண்டும் என்ற எண்ணம் நிரம்பியது. ஏன் இத்தனை ஆண்டுகளாய் பிரிந்திருந்தாய், என் வேதனைகளைப் பகிர ஏன் என்னுடன் நீ இல்லை என்றெல்லாம் வினா எழுப்பத் தூண்டியது மனம். அவன் தவறாக எண்ணிவிட்டால்??அச்சுறுத்தியது புத்தி.

"உனக்கு கேட்கணும்னு தோணலையா மாயா?இத்தனை நாளா ஏன் உன்கிட்ட நான் பேசலை? ஏன் அந்த நிகழ்வுக்கு அப்பறம் உன் பார்க்கக் கூட இல்லைன்னு?" மனதினைப் படிப்பவன் போல அவன் கேட்டுவிட, தயக்கங்கள் விடைப்பெற்றுக் கொண்டன. மென்மையான அவள் கரத்தினை அவள் பற்ற, அதற்கு மேலும் தயங்காதவளாய், அவன் நெஞ்சத்தில் சாய்ந்தாள் மாயா. இதனை எவருமே எதிர்நோக்கவில்லை. ஆண்டுகளாய் மனம் கொண்ட காயம் கண்ணீராய் வெளியானது. தாய் என்பவளும் அதற்கு மதிப்பளிக்கவில்லை அல்லவா!

"ஏ..என்னாச்சு?ஏன் அழுற?" அவள் புரியும் காரியம் விளங்கவில்லை அவனுக்கு! ஒன்று மட்டும் ஊகித்திருந்தான், அவள் மிகுந்த காயப்பட்டிருக்கிறாள்.

"இத்தனை வருடமா ஏன் என்னைப் பிரிந்திருந்தீங்க? உங்கக்கிட்ட இருந்த பாதுகாப்பு வேற எங்கேயும் எனக்கு கிடைக்கவே இல்லை.அந்த விஷயத்துக்கு அப்பறம் அம்மாக் கூட குடும்ப கௌரவம் மட்டும் தான் பார்த்தாங்க! ஸ்வேதாக்கு கிடைத்த உரிமைக் கூட எனக்குக் கிடைத்ததே இல்லை." மனமுடைந்து அழுதாள் அவள்.

"மாயா...ஒண்ணுமில்லைம்மா! அழாதே!இதுக்காகத் தான் நான் அமெரிக்கா போயிட்டேன். நீ நிம்மதியா வாழணும்னு ஒரே காரணத்துக்காகத் தான் மாயா! ஆனா, அது உன் வாழ்க்கையைத் திருப்பிப் போடும்னு நான் எதிர்ப்பார்க்கலை!" அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை.

"உனக்காகத் தான் இதுவரைக்கும் காத்திருந்தேன். உண்மையை சொல்லணும்னா நான் ஆரம்பத்துல இருந்தே உன்னை விரும்பினேன் மாயா. ஆனா, நீ அப்போ சின்னப் பொண்ணு! உன் கவனம் என்னால திசை மாற நான் விரும்பலை. நான் ஏதேதோ கனவு கண்டு வைத்திருந்தேன். அதுப்படி நடந்திருந்தா இந்நேரம் நமக்கு குழந்தையே பிறந்திருக்கும்!" என்ற வாக்கியத்தில் சட்டென நிமிர்ந்தாள் அவள்.

"நீ வருவன்னு எனக்குத் தெரியும்! உனக்காகத் தான் இத்தனை வருடமா காத்திருந்தேன். எதைப் பற்றியும் இனி நீ கவலைப்படணும்னு இல்லை. நான் இருக்கேன்!" அவள் கண்ணீரைத்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.