(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

"ஆமா! எட்டு வயசுல இருந்துத் தானே மலைக்கு போறேன். இது வெற்றிக்கரமான பதினெட்டாவது வருடம்! இந்த வருடம் போயிட்டு வந்தா, நான் குருசாமி ஆகிவிடுவேன்!" பெருமிதத்துடன் விட்டத்தை பார்த்த ஆருயிர் புதல்வனுக்கு அந்த சபரிகிரிநாதன் தான் புத்திப் புகட்ட வேண்டும் என்பதாக ஓர் பார்வைப் பார்த்தார் தர்மா.

"ஏதோ நல்லா இருந்தா சரி! நாளைக்கு கோவிலுக்குக் கிளம்பணும்! போய் தூங்கு!"

"ஆமா! நாளையில இருந்து பச்சைத் தண்ணீரில் குளிக்கணும்! வெறும் தரையில படுக்கணும்! நாளைக்குப் பாருங்கமீ! உங்க பிள்ளை எப்படி பயப்பக்தியோடு இருக்கப் போறான்னு!" ஒருவேளை கங்கா தனக்கு இல்லையென்றே முடிவுக் கட்டிவிட்டானோ!

காத்திருப்புகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்....நிலைத்தடுமாறி நிகழ்ந்த நிகழ்வுகளில் சில இலக்குகள் வாழ்வினில் இல்லை என்று மனித மனம் ஒரு சங்கல்பம் எடுத்துவிடுகிறது. இதில் நானோ, தாங்களோ என்றுமே விதிவிலக்கல்ல! விரும்பிய ஒன்றின் மேல் பற்று வைக்க இதயம், அதை மட்டுமே சகலமுமாய் எண்ணும்! விதி வசத்தால் அவ்வெண்ணம் மட்டுமே வாழ்க்கை என்றும் தங்கள் அறிவானது அவ்விருப்பத்தினை ஆதவனாக்கி சுற்றத் தொடங்கும்! விளைவு...! எதிர்நோக்கா சம்பவங்கள் எதிர்நோக்கா நேரத்தில் எதிர்நோக்காவண்ணம் சம்பவிக்கும்! உலகில் பிறந்தவர் எவராயினும் இச்சூழலை கடக்காமல் வாழ்வினைக் கடக்க இயலாது. எப்போதேனும் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ விதி வசத்தினால் தவறிழைக்க நேரும் சமயத்தில் அதிலிருந்து மீண்டு வாருங்கள்! எதிர்காலம் ஒன்று எப்போதும் உண்டு, அதன் எல்லையை அறியாமல் இங்கே பயணத்தை முடிக்க (ஆசைக்கு அணைப்போட) முற்பட்டால் தங்களின் வருகையை நோக்கி எதிர்காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட தனித்துவ வெகுமதி இறுதிவரை தாங்கள் வராமலே மாண்டுப்போகும்! அத்தகு தீங்கினைத் தங்களின் எதிர்காலத்திற்கு இழைக்கும் துணிவுக் கொள்ளாதீர்கள்!

"ங்களை மன்னிக்க வேண்டியது நான் இல்லைப்பா! அம்மா தான்!" மகனின் வாக்கானது நெஞ்சினைக் கிழித்துக் கொண்டிருந்தது. தனிமையில் நிலவொளியில் உலவியப்படி இருந்தவர் எண்ணத்தில் அவள் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தன.

"நான் இப்போ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா என்னப் பண்ணுவீங்களாம்?" திருமணப் பந்தத்தின் பேச்சு எழுந்த சமயத்தில் அவளிடம் தன் மனதினை விளக்கியப்போது, தனக்கே உரிதான கர்வத்தில் அவள் கேட்டவிதம் ராகவனைக் கட்டிப்போட்டது! சூழல் குறித்து ஏதும் கவலைக்கொள்ளாதவராய் அவர் முன்னேற, பின்னோக்கி நகர்ந்தார் தர்மா. சற்றும் எதிர்நோக்கா வண்ணம் அவர் இடையைப் பற்றி தன்னருகே இழுக்க, மூச்சே உறைந்துப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.