(Reading time: 11 - 22 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

என்று மறுத்தாலும், கோபத்திலும் சரி, அடுத்தவரை காயப்படுத்துவதிலும் தந்தையின் சாயலையே பெற்றிருந்தான். தாயாருக்கு அவ்விரண்டு குணங்களுமே கிடையாது! காரணமே இன்றி அவர் புன்னகைத்தது அவன் சினத்தை மேலும் தூண்டியது.

"இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?" என்ற மகனை நோக்கி 'இல்லை' எனத் தலையசைத்தார் அவர்.

"சொன்னா மறுபடியும் கோபப்படுவ!" என்ற ஏளனமான தொனி உண்மையில் அவன் கோபத்தினை அதிகமாக்கியது. ஏதும் மேற்கொண்டு பேச விரும்பாதவனாய் அவர் முகத்தினை சினத்துடன் உற்று நோக்கினான் அசோக்.

"நீ உன் செயல்களில் தர்மா மாதிரி இருக்கலாம். ஆனா உன்னுடைய குணங்கள் பல வருடத்திற்கு முன்னாடி என்னை நான் பார்க்கிற மாதிரி இருக்கு!" என்ற கூற்றில் திடுக்கிட்டான் அவன்.

"உங்களை மாதிரி நான் எப்போதும் இருக்க விரும்பலை! ஒரு பொண்ணை நம்ப வைத்து, ஏமாற்றி, அவளை அநாதையா..." என்ற வாக்கியம் முடிவதற்குள் அவனைத் தடை செய்தது ஒரு குரல்!

"ஏங்க...! என்னங்க பேசிட்டு இருக்கீங்க?" அவ்வளவு நேரமும் தந்தை மகனின் உரையாடலுக்கு குறுக்கே வர முனையாதவள் அவன் வார்த்தைகளைக் கேட்டதும் அவனைக் கண்டித்தாள். சூர்ய நாராயணனின் பார்வை கூர்மையாய் அவனைத் துளைத்தது.

"என்னடா தெரியும் உனக்கு எங்களைப்பற்றி?" மிக சாந்தமாகவே வெளிவந்தன அவர் வார்த்தைகள்!

"உனக்கு அவ அம்மா அந்தக் கோபத்துல நீ பேசுற! எனக்கு அவத்தான்டா எல்லாமே! நீ இத்தனை வருடமா அவக்கூடவே இருந்திருக்க,! ஆனா இத்தனை நாளா நான் அவளை என் இதயத்துல சுமந்திருக்கேன். நாங்க எப்படி வாழ்ந்தோம்னு உனக்குத் தெரியுமா? இல்லை...எப்படி காதலித்தோம்னு உனக்குத் தெரியுமா?உனக்கு என்னடா தெரியும் எங்களுடைய வாழ்க்கையைப் பற்றி!" அவர் வார்த்தைகள் மிக நுட்பமான அமைதியினை அங்கு ஈந்தது. எனினும் வார்த்தை போரில் அவர் வெற்றியடைய அவன் விரும்பவில்லை.

"அதனால தான் அவங்களை அவமானப்படுத்தினவங்களையே கல்யாணம் பண்ணி, ஒரு பையன் வேற பிறந்தானா?" அதற்கு மேலும் அவன் என்னவெல்லாம் பேசுவான் என்ற அச்சம் சிவன்யாவிற்கு! தன்னைக் காதலை அவமானப்படுத்த முனைந்த மகனை ஓங்கி அறைய வேண்டும் என்று எழுந்த கோபத்தினை மிக கடினமாக்கிக் கட்டுப்படுத்தினார் சூர்ய நாராயணன்.

"உண்மை என்னன்னுத் தெரியாம பேசாதே அசோக்!" ஒரு நொடி கண்களை அழுந்த மூடித் திறந்தார் அவர். அவர் கொண் சினத்தைக் காண்கையில் ஒரு நொடி  மனம்,'திக்' கொன்றானது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.