(Reading time: 11 - 22 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"மீனா..!" கண்கள் சிவக்க ஓங்கிய கரம் அவரது சுயக்கட்டுப்பாட்டால் பாதியிலே நின்றது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அவர் கரம் ஓங்கியதில்லை. கதிகலங்கி போனார் மீனாட்சி!!

"அடிங்க!ஏன் நிறுத்திட்டீங்க?என்னையே அடிக்க கை ஓங்கிட்டீங்க! அடிங்க! அடித்துக் கொன்னுடுங்க! ஆனா ஒண்ணு, என் பேச்சை மீறி சிவன்யா தான் முக்கியம்னு போனா என் பிணத்தை தான் நீங்க பார்க்கணும்!" கண்ணீரை பகடையாக்கி மிரட்டினார் அவர்.

"ஏன்டி இப்படி எல்லாம் பண்ற? அவ என் இரத்தம்டி!என்னுடைய வாரிசு! என் சாமி! அவ தான் என் மொத்த உலகமுமே! உன் கௌரவத்தை காப்பாற்றி அப்பாவையும், மகளையும் பிரிக்க பார்க்கிறீயே! இந்தப் பாவம் நிச்சயம் உன்னை சும்மா விடாது மீனா!" மனமுடைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து விலகினார் அவர். அவர் மனமுடையும் வேளையெல்லாம் உற்றத்துணை அவர் முருகன் மட்டுமே!! பூஜை அறைக்குள் சென்று காலார அமர்ந்துக் கொண்டு,

"அடேய்!அப்பா! கார்த்திகேயா! இருக்கியாடா நீ? என் பொண்ணை பார்க்க கூடாதுன்னு சொல்றாடா அவ! என் சிவன்யாவை நீ கொடுத்த வரமா தானேடா பார்த்தேன். உன்னை கும்பிட்ட பலனா தானேடா நினைத்தேன்! இப்படி எங்களைப் பிரிக்கப் பார்க்கிறீயேடா பாவி...! அவ இல்லாம என்னால இருக்க முடியாதுப்பா! கூட்டிட்டு போயிடுப்பா, உன் பிள்ளையயை கூட்டிட்டு போயிடுப்பா!" அவர் அழுதவண்ணம் அந்த சரவணனையே கதிகலங்க வைத்திருக்கும்!!! கண்முன் தன் பக்தன் அழுகிறான். அவன் வேண்டுதலோ நியாயமானதே! எனினும், நிறைவேற்றும் காலம் இன்னும் கரம் கூடவில்லை. தன் மகளே தனக்கான பெருமை என்று பெருமைக் கொள்ளும் தந்தையின் கர்வம் என்றேனும் ஓர் நாள் விண்ணைத் தொடும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஒரு பகுதியை முடித்துவிட்டோம் என்று மமதையில் சுற்றித் திரிகின்றனர் பலர், தன்னை இரு விழிப்பார்வைகள் மறைமுகமாக கவனிக்கிறது என்று அறியாமல்!!!

"நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியாப்படலை அசோக் எனக்கு!அவர் உங்க அப்பா! ஆனா அப்பாக்கிட்ட எப்படி பேசணுமோ அப்படி நீங்க பேச மாட்றீங்க!" தன்னால் இயன்ற வரையில் அறிவுரை கூறினால் அவள். அதனால் பலன் இல்லை என்பதாய் அமர்ந்திருந்தான் அசோக்.

"செய்த தவறை உணர்ந்து அதற்கான தண்டனையும் அவர் அனுபவித்துட்டார்! இனியாவது அவரை மன்னித்து ஏற்றுக்கோங்க!" அவள் அறிவுறுத்திக் கொண்டிருக்க, அவன் மௌனமாக அமர்ந்திருக்க, அவ்விருவரின் கவனத்தையும் ஈர்த்தது அக்காலடி ஓசை! நவீன்குமார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.