(Reading time: 11 - 22 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 15 - அமுதினி

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்

இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?

வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்

கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

 

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ

துன்பக் கவிதையோ கதையோ?

ந்த தெரு முனைக்கு வந்த பவித்ரா அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவின் அருகே சென்றாள்.

"மேட்டுகுப்பம் வரைக்கும் போகணும்" அந்த ஆட்டோ ட்ரைவரிடம் சொல்ல, "நூறு ரூபா ஆகும் மா" என்றவர் அவள் சரி எனவும் வண்டியை எடுத்தார்.

ஆட்டோவில் ஏறி அமர்ந்தவளுக்கு நேற்று இரவு வந்த அந்த தொலைபேசி அழைப்பை எண்ணி கொஞ்சம் நடுக்கமாகவே இருந்தது. இன்னும் அந்த குரலும் மிரட்டலும் அவள் காதுகளில் ஒலித்துகொண்டு இருந்தது.

"என்னமா பார்த்தா பாவம் போல இருக்க, ஆனா மிரட்ட ஆளெல்லாம் கூட்டிக்கிட்டு வரியா..என்னை பத்தி உனக்கு தெரியாது. நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நீ மேட்டுகுப்பம் வர. வரும் போது உன் கூட வந்தானே ஒருத்தன் அவன் யாரு? உன் லவர்ரா? உன்னை ஏதாச்சும் சொன்னா அந்த பொங்கு பொங்கறான். அது சரி நல்லா அழகா தான இருக்க. அதான்...நீ என்ன பண்ற நாளைக்கு வரும்போது அன்னைக்கு அவன் காட்டுன டாக்குமெண்ட் எல்லாம் கொண்டு வர. இல்லை வரமாட்டேன்னு சொன்னினாலோ இல்லை அவன் கிட்ட சொல்லவோ போலீஸ் கிட்டவோ நெனைச்சா அடுத்த நாள் காலைல ஆஸ்ரமம் மொத்தமும் எரிஞ்சு அங்க இருக்கற எல்லாரும் செத்துட்டாங்கனு நியூஸ் வரும் பார்த்துக்கோ" அந்த அழைப்பை ஏற்று பேசியதில் இருந்து பவித்ராவுக்கு தூக்கமே வரவில்லை. அவளை கொன்று விடுவேன் என்று சொல்லியிருந்தால் கூட பயந்திருக்க மாட்டாள். ஆனால் ஆஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆனால்? கையில் இருந்த பைலை பார்த்தாள். அதில் அவன் கேட்ட டாக்குமெண்ட்ஸ் இருந்தது.

"அண்ணா எவ்ளோ நேரம் ஆகும் போறதுக்கு?" ஆட்டோ டிரைவர்ரிடம் கேட்க, "கொஞ்சம் டிராபிக் மா. இன்னும் ஒரு அரை மணில போயிடலாம்" எனவும் பதற்றத்துடனேயே அமர்ந்திருந்தாள்.

ஒரு சிக்னல்லில் ஆட்டோ நிற்க, அதன் எதிர்புறம் இருந்த மற்றொரு சிக்னலில் இருந்து இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.